மதுரை மாவட்டத்தில் சேதமடைந்த 200 பள்ளி கட்டடங்களை இடிக்க மாவட்ட ஆட்சியர் அனிஷ் சேகர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
நேற்று நெல்லையில் எஸ்.என்.ஹைரோட்டில் பொருட்காட்சி திடல் அருகே உள்ள தனியார் பள்ளியான சாஃப்டர் மேல்நிலைப்பள்ளியின் கழிப்பறை சுவர் இடிந்து விழுந்ததில், 3 மாணவர்கள் உயிரிழந்துள்ளனர். மேலும் காயமடைந்த 4 மாணவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த சம்பவத்தை தொடர்ந்து, தமிழகம் முழுவதும் இருக்கக்கூடிய அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகளில், மாவட்டத்தோறும் அங்கு இருக்க கூடிய முதன்மை கல்வி அதிகாரி மற்றும் வருவாய்துறை அதிகாரிகள் சேர்ந்து குழு அமைத்து ஆய்வு மேற்கொண்டு, கட்டிடத்தின் உறுதித்தன்மை குறித்து ஆய்வு செய்யுமாறு பள்ளிக்கல்வித்துறை உத்தரவு பிறப்பித்த்துள்ள நிலையில், நேற்று 38 மாவட்டங்களில், பள்ளி கட்டடங்கள் குறித்து ஆய்வு செய்ய 19 கல்வி அலுவலர்களை நியமித்து பள்ளிக்கல்வித்துறை உத்தரவு பிறப்பித்தது.
இந்நிலையில், புதுக்கோட்டையில் 100 பள்ளி கட்டடங்களை இடிக்க அம்மாவட்ட ஆட்சியர் உத்தரவு பிறப்பித்திருந்தார். இதனை தொடர்ந்து, மதுரை மாவட்டத்தில் சேதமடைந்த 200 பள்ளி கட்டடங்களை இடிக்க மாவட்ட ஆட்சியர் அனிஷ் சேகர் உத்தரவு பிறப்பித்துள்ளார். அதன்படி சேதமடைந்த அடையாளம் காணப்பட்டுள்ள 120 வகுப்பறை கட்டடங்கள் மற்றும் 80 கழிவறை கட்டங்களை இடிக்க உத்தரவு பிறப்பித்துள்ளார். மேலும், பழுதான கட்டடங்களுக்கு அருகே மாணவர்கள் செல்வதை தடுக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளார்.
நீலகிரி : கடந்த 3ம் தேதி பெய்த மழையால் மலை ரயில் பாதையின் பல இடங்களில் மண் சரிவுகள் ஏற்பட்டன,…
சென்னை : கேரள மாநிலத்தில் மிகவும் பிரசித்திபெற்ற சபரிமலையில் உள்ள அய்யப்பன் கோவிலில் மண்டல, மகர விளக்கு சீசனையொட்டி அடுத்த…
சென்னை : தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் மன்னார் வளைகுடா பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன்…
சென்னை: வடகிழக்கு பருவமழைக் காலத்தில், அடிக்கடி பரவும் நோய்கள், குறிப்பாக டெங்கு, வீடு மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் தவிர்க்க முடியாத…
பெங்களூர் : அடுத்த ஆண்டு நடைபெறவிருக்கும் ஐபிஎல் போட்டியில் எந்தெந்த வீரர்கள் எந்தெந்த அணிக்கு ஏலத்தில் சென்று விளையாடப்போகிறார்கள் என்ற…
சென்னை : இயக்குநர் சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாகியுள்ள ‘கங்குவா’ படம் சூர்யாவின் 42வது படமாகும். இப்படம் வரும் நவம்பர்…