#BREAKING: கோவை தெற்கில் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் முன்னிலை!!

கோவை தெற்கு தொகுதியில் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் 1,391 வாக்குகள் பெற்று முன்னிலை.
தமிழக சட்டமன்ற தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி இன்று நடைபெற்று வருகிறது. முதல்கட்டமாக தபால் வாக்குகள் காலை 8 மணி முதல் எண்ணப்பட்டு வரும் நிலையில், தமிழகத்தில் அதிமுக கூட்டணி 47, திமுக கூட்டணி 68 இடங்களில் முன்னிலை வகித்து வருகிறது.
இதில் குறிப்பாக கோவை தெற்கில் பாஜக சார்பில் வானதி ஸ்ரீனிவாசன், திமுக கூட்டணியில் உள்ள காங்கிரஸ் வேட்பாளர் மயூரா எஸ்.ஜெயக்குமார் மற்றும் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் போட்டியிடுவதால் அத்தொகுதி நட்சத்திர தொகுதியாக கருதப்படுகிறது.
இந்த நிலையில், கோவை தெற்கு தொகுதியில் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் 1,391 வாக்குகள் பெற்று முன்னிலை வகித்து வருகிறார். காங்கிரஸ் வேட்பாளர் எஸ்.ஜெயக்குமார் 1,345 வாக்குகள் பெற்று பின்னடைவை சந்தித்துள்ளார். வாக்கு எண்ணிக்கை தொடக்க நிலையில், கமல்ஹாசன் முன்னிலையில் உள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
தெறிக்கவிடலாமா.? GBU தரமான சம்பவம்., அஜித் ரசிகர்கள் கொண்டாட்டம்! டீசர் வீடியோ இதோ…
February 28, 2025
AFGvAUS : 274 டார்கெட்., பவுலிங்கில் மிரட்டிய ஆஸ்திரேலியா! நிலைத்து ஆடிய ஆப்கானிஸ்தான்!
February 28, 2025