முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார் கோவை செல்வராஜ்.
அதிமுகவில் இருந்து விலகிய கோவை செல்வராஜ் தனது ஆதரவாளர்களுடன் திமுகவில் இணைந்தார். சென்னை அண்ணா அறிவாலயத்தில் தமிழ்நாடு முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலினை சந்தித்து, அவரது முன்னிலையில் முன்னிலையில் கோவை செல்வராஜ் திமுகவில் இணைந்தார்.
இதனிடையே, அதிமுகவில் இருந்து இருந்து விலகுவதாக ஓ.பன்னீர்செல்வத்தின் அணியை சேர்ந்த கோவை செல்வராஜ் சமீபத்தில் அறிவித்திருந்தார். அதிமுக என்ற பெயரில் சுயநலத்துக்காக செயல்படுவோர் மத்தியில் இருக்க விரும்பவில்லை என்றும் எடப்பாடி பழனிசாமியும், ஓ.பன்னீர்செல்வமும் தங்கள் சுயநலத்துக்காக சண்டை போட்டு வருகின்றனர் எனவும் கூறியிருந்தார்.
மேலும், திராவிட பாரம்பரியத்தை விட்டு விலகமாட்டேன், விரைவில் நல்ல முடிவு எடுப்பேன், இதுபோன்று அரசியலை விட்டு விலகமாட்டேன், ஆனால் துரோகிகளோடு சேர்ந்து ஒருநாளும் பணியாற்றமாட்டேன் என்றும் கோவை செல்வராஜ் தெரிவித்திருந்தார்.. இதனைத்தொடர்ந்து, கோவை செல்வராஜ் இன்று திமுகவில் இணைய உள்ளதாக தகவல் வெளியாகியிருந்தது. இந்த நிலையில், முதலமைச்சர் முக ஸ்டாலினை சந்தித்து திமுகவில் தனது ஆதரவாளர்களுடன் இணைந்துள்ளார்.
சென்னை : நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் நேற்று முன்தினம் மத்திய அமைச்சர் அமித்ஷா மாநிலங்களவையில் பேசுகையில், அம்பேத்கர் குறித்து பேசுவது…
சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை, இந்த வார தொடக்கத்தில் இருந்தே சரிந்த வண்ணம் உள்ளது. இன்று சவரனுக்கு ரூ.520…
சென்னை : நாடாளுமன்ற மாநிலங்களவையில் நேற்று முன்தினம் பேசிய மத்திய அமைச்சர் அமித்ஷா, அம்பேத்கர் பெயரை கூறுவதற்கு பதிலாக கடவுள்…
சென்னை : தென்மேற்கு வங்கக் கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, தொடர்ந்து அதே பகுதியில் நிலவுகிறது. இது அடுத்த…
ஆப்பிரிக்கா : இந்திய பெருங்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக கடந்த சில நாட்களுக்கு முன்பு வலுப்பெற்றது. இதனையடுத்து, இந்த…
சென்னை : இந்திய கிரிக்கெட் அணியின் சுழற்பந்துவீச்சாளர் ரவிசந்திரன் அஸ்வின் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து தான் ஓய்வு பெறுவதாக திடீரென…