#BREAKING: விலையுயர்ந்த மருந்தை வாங்க முதல்வர் உத்தரவு.!
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. கடந்த இரண்டு நாள்களாக தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 3,000 -ஐ தாண்டி உள்ளது. இந்நிலையில், கொரோனாவால் விலை மதிப்பற்ற உயிர்களை காக்கும் வகையில், தமிழகத்தில் கொரோனா சிகிச்சைக்கு Tocilizumb, Remdesivir, Enoxaparin உள்ளிட்ட விலையுயர்ந்த மருந்துகளை வாங்க முதல்வர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார், என சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
இதுவரை பாதி மருந்துகள் வந்துவிட்டன. மீதமுள்ள மருந்துகள் ஓரிரு நாள்களில் வந்து விடும் என அவர் தெரிவித்துள்ளார். மேலும், உயிர்காக்கும் ஊசி மருந்துகள் மாவட்ட அரசு மருத்துமனைகளுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது என அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்