#BREAKING: பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம்!
கல்வி உதவித் தொகையை மீண்டும் வழங்கக்கோரி பிரதமர் மோடிக்கு தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம்.
சிறுபான்மை மாணவர்களுக்கான கல்வி உதவித்தொகையை மீண்டும் வழங்கிட வேண்டும் என்று பிரதமர் மோடிக்கு, முதலமைச்சர் முக ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். அதில், 1-8ம் வகுப்பு சிறுபான்மை மாணவர்களுக்கு வழங்கப்பட்ட மெட்ரிக் கல்விக்கு முந்தைய கல்வி உதவித் தொகையை மத்திய அரசு ரத்து செய்துள்ளதை கைவிட்டு மீண்டும் வழங்கிட வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
திட்டத்தின் கீழ் 2021-22-ல் தமிழகத்தை சேர்ந்த 4,49,559 மாணவர்களுக்கு ரூ.86.76 கோடி உதவித் தொகை ஒப்பளிக்கப்பட்டுள்ளது. 9 – 10ம் வகுப்பு மாணவர்களுக்கு உதவிதொகை என்பது தொடக்க கல்வியை ஊக்கப்படுத்துவதற்கு எதிராக அமைந்துவிடும். மத்திய அரசின் முடிவினால், தமிழ்நாட்டில் சுமார் 5 லட்சம் ஏழை சிறுபான்மை மாணவர்கள் பாதிக்கப்படுவார்கள் என தெரிவித்துள்ளார்.
#BREAKING_NEWS : பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம்!#TNGovt #CMMKSTALIN #PMModi pic.twitter.com/8107KnUQa3
— Dinasuvadu Tamil (@DinasuvaduTamil) December 7, 2022