#BREAKING: வெளியுறவுத்துறை அமைச்சருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்!
தமிழக மீனவர்களை மீட்கக்கோரி வெளியுறவுத்துறை அமைச்சருக்கு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் கடிதம்.
இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்களை மீட்க உடனடி நடவடிக்கைகோரி, வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட அனைத்து மீனவர்களையும், மீன்பிடிப் படகுகளையும் விடுவிக்க இந்திய அரசின் உயர்மட்ட அளவில் உறுதியான மற்றும் ஒருங்கிணைந்த நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும்.
இலங்கையில் தற்போது நிலவிவரும் அசாதாரண சூழ்நிலையை கருத்தில் கொண்டு மீன்பிடிப் படகின் உரிமையாளர்கள், இலங்கை நீதிமன்றத்தில் நேரில் ஆஜராவதில் இருந்து விலக்கு அளிக்கத் தேவையான நடவடிக்கைகளை எடுக்க தாம் வலியுறுத்துவதாகவும் முதலமைச்சர் அவர்கள் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். மேலும் இக்கடிதத்தில், கடந்த சில மாதங்களில் கைது செய்யப்பட்ட 18 மீனவர்களை சொந்த நாட்டுக்கு அழைத்துவர உதவியதற்கு மத்திய வெளியுறவுத் துறை அமைச்சருக்கு, முதலமைச்சர் தனது நன்றியைத் தெரிவித்துக் கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் கடிதம் #TNGovt #CMMKSTALIN #TNFishermen #SJaishankar pic.twitter.com/4BJJo7zFJO
— Dinasuvadu Tamil (@DinasuvaduTamil) July 25, 2022