#BREAKING: “சிற்பி” திட்டத்தை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் ஸ்டாலின்!

Default Image

சிறார் குற்றங்களுக்கு தீர்வுகாணும் சிற்பி திட்டத்தை முதலமைச்சர் முக ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

பள்ளி மாணவர்களை நல்வழிப்படுத்தும் சிற்பி திட்டத்தை முதலமைச்சர் முக ஸ்டாலின் தொடங்கி வைத்தார். சிற்பி திட்டத்தை சென்னை கலைவாணர் அரங்கில் முதலமைச்சர் முக ஸ்டாலின் துவக்கி வைத்தார். சிறார் குற்றச்செயல்களுக்கு தேர்வு காணும் வகையில் சென்னையில் 100 மாநகராட்சி பள்ளிகளில் சிற்பி திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. சென்னையில் 100 மாநகராட்சி பள்ளிகளில் தலா 50 மாணவர்களை கொண்டு சிற்பி திட்டம் செயல்படுத்தப்படுகிறது. என்.சி.சி. போல் போலீஸ் நிகழ்ச்சிகளில் மாணவர்களை ஈடுபடுத்தும் வகையில் சிற்பி திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இதில் 8-ஆம் வகுப்பு முதல், மாணவர்களை தேர்வு செய்து அவர்களுக்கென தனி சீருடையும் வழங்கப்படுகிறது.

சிற்பி திட்டத்தை தொடங்கி வைத்த பின் பேசிய முதலமைச்சர் முக ஸ்டாலின், சிற்பியின் நோக்கம் பாதிக்கப்பட்ட சிறார்களுக்கு வழிகாட்டுதல். குற்றச்செயலகளால் பாதிக்கப்படும் சிறுவர்களை கண்டறிந்து அவர்களுக்கு சிற்பி திட்டத்தின் கீழ் வழிகாட்ட ஏற்பாடு. 100 பள்ளிகளில் தலா 50 மாணவர்கள் தேர்வு செய்து அவர்களுக்கு என்.சி.சி. போல் தனி சீருடை அளித்து உரிய பயிற்சி அளிக்க திட்டமிடப்பட்டுள்ளது. பள்ளிகளில் போதைப்பொருள் நடமாட்டத்தை கண்காணித்தல் உள்ளிட்ட பணிகளில் ‘சிற்பி’ மாணவர்கள் ஈடுபடுத்தப்படவுள்ளனர்.

சிறார்கள் குற்றச்செயல்களில் ஈடுபடுவதை தடுப்பதாற்காகவே இந்த சிற்பி திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. சிறார் குற்றங்களை கட்டுப்படுத்த தமிழக காவல்துறை தீவிரமாக கவனம் செலுத்தி வருகிறது. சிறார்கள் குற்றம் அதிகரிக்க குடும்ப வறுமை, பொருளாதார நிலைமையே காரணமாக அமைந்துள்ளது. சுய ஆளுமை திறன், பெற்றோர் பேச்சை கேட்டு நடப்பது போன்ற பண்புகளை சிறார்கள் வளர்த்துக் கொள்ள வேண்டும். சிற்பி திட்டங்களுக்கு பயிற்சி, உணவு உள்ளிட்டவற்றுடன் 8 இடங்களுக்கு கல்வி சுற்றுலாவும் அழைத்து செல்ல நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் சிற்பி திட்ட பயிற்சி காலத்தில் எந்தவித மனித உரிமை மீறலும் இருக்கக்கூடாது எனவும் தெரிவித்தார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்