#BREAKING: இலவச மிதிவண்டி வழங்கும் திட்டத்தை தொடங்கி வைத்தார் முதல்வர் ஸ்டாலின்..!
மாணவர்களுக்கு இலவச சைக்கிள் தரும் திட்டத்தை சென்னையில் முதலமைச்சர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
தமிழகத்தில் அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் 11, 12-ஆம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு விலையில்லா மிதிவண்டி வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் முக ஸ்டாலின் தொடங்கி வைத்தார். சென்னை நுங்கப்பாக்கத்தில் உள்ள ஆண்கள் மேல்நிலை பள்ளியில் இலவச மிதிவண்டி வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
அடர்நீல நிறத்தில் வழங்கப்பட்டுள்ள சைக்கிளில் சுற்றுசூழல் பாதுகாப்பு பற்றிய வாசகங்கள் இடம்பெற்றுள்ளனர். முதற்கட்டமாக ஒரு மாதத்தில் அரசு, அரசு உதவி பெறும் பள்ளியில் 11-ஆம் வகுப்பு மாணவ, மாணவிகள் 6.35 லட்சம் பேருக்கு இலவச சைக்கிள் வழங்க அரசு திட்டமிட்டுள்ளது.