#BREAKING: மே 8ல் 12ம் வகுப்பு தேர்வு முடிவு – பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு!

Published by
பாலா கலியமூர்த்தி

12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் மே 8-ஆம் தேதி வெளியிடப்படும் என பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு.

தமிழ்நாட்டில் 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகும் தேதி மாற்றப்பட உள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவித்திருந்தார். 12-ஆம் வகுப்பு தேர்வு முடிவுகளை, நீட் தேர்வுக்கு பின்பு வெளியிடுவது குறித்து முதலமைச்சரிடம் ஆலோசித்து முடிவு எடுக்கப்படும் எனவும் கூறியிருந்தார்.

அதாவது, திட்டமிட்டபடி, மே 5-ஆம் தேதி 12-ஆம் வகுப்பு தேர்வு முடிவு வெளியானால் மாணவர்களின் மனநலம் பாதிக்கப்படலாம், இதனால், நீட் தேர்வுக்கு பின்பு வெளியிடுவது குறித்து ஆலோசிக்கப்பட்டு முடிவு எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. நீட் தேர்வு மாணவர்களுக்கு மன உளைச்சல் ஏற்படும் என்பதால் தேர்வு முடிவை தள்ளி வைக்க கோரிக்கை வைக்கப்பட்டது.

இந்த நிலையில், மே 8-ஆம் தேதி 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. அதன்படி, 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் மே 8-ஆம் தேதி காலை 9.30 மணிக்கு  வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. நீட் தேர்வுகள் 7-ஆம் தேதி நடைப்பெற உள்ள நிலையில், மே 8-ஆம் தேதி 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியிடப்படுகிறது.

12-ஆம் வகுப்பு மாணவர்கள் தேர்வு முடிவுகளை, http://tnresults.nic.in ; http://dge1.tn.nic.in ; http://dge2.tn.nic.in ; http://dge.tn.nic.in ஆகிய இணையதளங்களிலும், தாங்கள் பயின்ற பள்ளிகளிலும் அறிந்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வை சுமார் 8 லட்சம் மாணவர்கள் எழுதியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

 

Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

வடம் இழுத்த அண்ணாமலை… அறுந்த கயிறு… பாய்ந்து பிடித்த பாதுகாவலர்கள்!

கோவை: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கோவையில் பாஜக விவசாயி அணி தலைவர் ஜி.கே.நாகராஜ் தோட்டத்தில் நேற்று நடைபெற்ற பொங்கல் விழாவில்…

3 minutes ago

வாகை சூடிய அஜித்துக்கு பொழியும் வாழ்த்து மழை! பிரபலங்கள் முதல் அரசியல் தலைவர்கள் வரை.!

சென்னை: துபாயில் நடைபெற்ற சர்வதேச அளவிலான 24H சீரிஸ் கார் ரேஸின் 991 பிரிவில் மூன்றாவது இடம்பிடித்து அசத்தியுள்ளது அஜித்குமார்…

52 minutes ago

இந்த 2 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை!

சென்னை: தமிழ்நாட்டில் 2 மாவட்டங்களுக்கு மட்டும் இன்று உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. சிதம்பரம் நடராஜர் கோயில் ஆருத்ரா தரிசனத்தையொட்டி கடலூர்…

1 hour ago

இன்று 5 மாவட்டங்களுக்கு கனமழை… 15ம் தேதி தென் மாவட்டங்களுக்கு எச்சரிக்கை.!

சென்னை: கிழக்கு இலங்கைக்கடல் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி…

14 hours ago

“மார்ச் 23ல் ஐபிஎல் தொடர் தொடக்கம்” பிசிசிஐ அறிவிப்பு!

டெல்லி: 2025 ஐபிஎல் தொடர், மார்ச் 23ம் தேதி தொடங்கும் என பிசிசிஐ துணைத் தலைவர் ராஜீவ் சுக்லா தெரிவித்துள்ளார்.…

14 hours ago

மகள் – மனைவியுடன் கியூட் உரையாடல்… மகனுடன் வெற்றியை பகிர்ந்து கொண்ட அஜித் குமார்.!

துபாய்: சில நாட்களுக்கு முன்பு, அஜித் கார் விபத்தில் சிக்கிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. தற்போது, இணையதளம் முழுவதும்…

15 hours ago