#BREAKING: வெளியானது 10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள்!
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.
தமிழ்நாட்டில் மார்ச் மற்றும் ஏப்ரல் மாதத்தில் நடைபெற்ற 2022-23-ஆம் கல்வியாண்டிற்கான 10 மற்றும் 11-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்படும் என அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவித்திருந்தது. அதன்படி, இன்று காலை 10 மணிக்கு 10-ஆம் வகுப்பு தேர்வு முடிவுகளும், பிற்பகல் 2 மணிக்கு 11-ஆம் வகுப்பு தேர்வு முடிவுகளும் வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டது.
இந்த நிலையில், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் 10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது. ஏப்ரல் 6 – 20 வரை நடைபெற்ற 10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வை 9.4 லட்சம் மாணவர்கள் எழுதியுள்ளனர். தேர்வு எழுதிய மாணவர்கள் www.tnresults.nic.in மற்றும் www.dge.tn.gov.in ஆகிய இணையதளங்களில் தெரிந்து தங்களது தேர்வு முடிவுகளை தெரிந்து கொள்ளலாம்.
மேலும், மாணவர்களின் கைபேசி எண்களுக்கு குறுந்செய்திகள் மூலமும் தேர்வு முடிவுகள் அனுப்பப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் 10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் மொத்தம் 91.39% மாணாக்கர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். 10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் இந்தாண்டும் மாணவர்களை விட மாணவிகளே அதிகளவில் தேர்ச்சி பெற்றுள்ளனர். அதன்படி, பொதுத்தேர்வில் மாணவர்கள் 88.16%, மாணவிகள் 94.66% தேர்ச்சி பெற்றுள்ளனர்.
TN State board Class X results declared by DGE#TNGovt #Class10 #DGE pic.twitter.com/dC9el1sFjH
— Ram Krishna (@nanasaiin) May 19, 2023