#BREAKING: ஒளிப்பதிவு மசோதா – முதல்வர் மு.க ஸ்டாலின் வலியுறுத்தல்!!
திரைப்பட தணிக்கை திருத்த சட்ட வரைவு விவகாரம், தொடர்பாக மத்திய தகவல் ஒளிபரப்புத்துறை அமைச்சருக்கு முதல்வர் மு.க ஸ்டாலின் கடிதம்.
இதுதொடர்பாக மத்திய தகவல் ஒளிபரப்புத்துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத்துக்கு முதலமைச்சர் முக ஸ்டாலின் எழுதிய கடிதத்தில், ஒளிப்பதிவு வரைவு திருத்த மசோதா, கருத்துச் சுதந்திரத்தை பறிக்கும் வகையிலும், மாநில அரசுகளின் அதிகாரங்களை குறைக்கும் வகையிலும் உள்ளது. எனவே, வரைவு ஒளிப்பதிவு திருத்த சட்ட மசோதாவை திரும்ப பெறவேண்டும் என்றும் இதுதொடர்பான முயற்சிகளை கைவிடு வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.
இதனிடையே, நடிகர் சூர்யா, கமல்ஹாசன் உள்ளிட்டவர்கள் வரைவு ஒளிப்பதிவு திருத்த சட்ட மசோதாக்கு எதிர்ப்பு தெரிவித்த நிலையில், நேற்றைய தினம் நடிகர் கார்த்திக் முதல்வரை நேரில் சந்தித்தபின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இந்த மாசோதாவை திரும்பப்பெற வேண்டும் என்று தெரிவித்திருந்தார். இந்த நிலையில் முதலமைச்சர் பல்வேறு காரணங்களை தனது கடிதத்தில் சுட்டிக்காட்டி, மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து கைவிடுமாறு மத்திய அரசை வலியுறுத்தியுள்ளார்.
திரைப்பட தணிக்கை திருத்த சட்ட வரைவு விவகாரம், தொடர்பாக மத்திய தகவல் ஒளிபரப்புத்துறை அமைச்சருக்கு முதல்வர் மு.க ஸ்டாலின் கடிதம்.#CMMKStalin #cinematographact2021 #tngovt pic.twitter.com/qR8ZdvEdCN
— Dinasuvadu Tamil (@DinasuvaduTamil) July 6, 2021