#Breaking:”தருமபுரியில் சிப்காட்,பால் பதனிடும் நிலையம் அமைக்கப்படும்” – முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு!
சென்னை:தருமபுரியில் புதிதாக சிப்காட் பூங்கா,புதிதாக பால் பதனிடும் நிலையம் உள்ளிட்டவை அமைக்கப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
சென்னை தலைமைச்செயலகத்தில் இருந்து பல்வேறு திட்டங்களை இன்று காணொலி வாயிலாக தொடங்கி வைத்த தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்கள்,தற்போது தருமபுரி மாவட்டத்தில் ரூ.250 கோடி மதிப்பிலான புதிய திட்டப்பணிகளுக்கு காணொலி மூலமாக அடிக்கல் நாட்டினார்.
இதனைத் தொடர்ந்து,பேசிய முதல்வர்:”தருமபுரியில் புதிதாக சிப்காட் பூங்கா ஏற்படுத்தப்படும்,புதிதாக பால் பதனிடும் நிலையம் அமைக்கப்படும்.ரூ.4600 கோடி மதிப்பில் ஒகேனக்கல் கூட்டுக்குடிநீர் திட்டத்தின் இரண்டாவது கட்டத்திற்கு திட்ட அறிக்கை தயாரிக்கப்பட உள்ளது.சேலம் மாவட்டம் கோட்டையூரையும்,தருமபுரி மாவட்டம் ஒட்டனூரையும் இணைக்க ரூ.250 கோடியில் சாலை அமைக்கப்படும்”,என்று கூறினார்.
மேலும்,”கொரோனா பரவல் காரணமாக பெரிய அளவில் இந்த நிகழ்ச்சியை நடத்த முடியவில்லை,கொரோனா பரவல் குறைந்ததும் தருமபுரி மாவட்டத்திற்கு வருகை புரிவேன்”,எனவும் முதல்வர் தெரிவித்துள்ளார்.