#BREAKING: முதலமைச்சரின் விளையாட்டுத்துறை விருதுகள் அறிவிப்பு!
சிறந்த விளையாட்டு வீரர்கள், பயிர்த்தியாளர்கள், சிறந்த விளையாட்டு ஆசிரியர்கள், நடுவர்களுக்கு விருதுகள் அறிவிப்பு.
விளையாட்டுத்துறையில் சிறந்து விளங்குவோருக்கான தமிழக முதலமைச்சரின் விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, 2018-19, 2019-20-ஆம் ஆண்டுக்கான சிறந்த வீரர், வீராங்கனைகளுக்கு விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. 2018-19-ல் சிறந்த டென்னிஸ் வீரர்களாக பிருத்வி சேகர், நெடுஞ்செழியன், துப்பாக்கிசூடுதல் வீராங்கனை ஸ்ரீநிவேதா தேர்வு செய்யப்ட்டுள்ளனர்.
ஸ்குவாஷ் வீராங்கனை சுனைனா சாரா குருவில்லா, துப்பாக்கி சுடுதல் பயிற்சியாளர் சத்குருதாஸ்க்கு விருது அருவிக்கப்பட்டுள்ளது. தடகள பயிற்சியாளர் ஜி.கோகிலா, கால்பந்து பயிற்சியாளர் ராஜேஷ் கன்னா, வாலிபால் பயிச்சியாளர் எம்பி முரளிக்கு விருது வழங்கபடுகிறது. கூடைப்பந்து விளையாட்டு வீரர் விபி தனபால் குமார், சிறந்த விளையாட்டு அமைப்பாக தமிழ்நாடு கூடைப்பந்து சங்கம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. 2019-20-ல் சிறந்த வீராங்கனைகளாக அனுசுயா பிரியதர்சினி (டேக்வாண்டோ) செலினா தீப்தி (டேபிள் டென்னிஸ்) தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
இதுபோன்று சிறந்த விளையாட்டு வீரருக்கான விருது டென்னிஸ் வீரர் பிரஜ்னேஷ் குணேஸ்வரன் தேர்வாகியுள்ளார். தடகள பயிற்சியாளர் கேஎஸ் முகமது நிஜாமுதின், கால்பந்து பயிற்சியாளர் கோகிலா, பேட்மிண்டன் பயிற்சியாளர் ராமசுப்பிரமணியன், வாலிபால் பயிற்சியாளர் ஆரோக்ய மெர்சிக்கு விருது அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், கபடி போட்டி நடுவர் சுந்திரராஜ் 2020-ஆம் ஆண்டுக்கான சிறந்த நடுவருக்கான முதலமைச்சரின் விளையாட்டுத்துறை விருதை பெறுகிறார்.