#BREAKING: 33 பேருக்கு முதல்வரின் சிறப்பு பதக்கம்..!
சுதந்திர தினத்தையொட்டி 33 பேருக்கு முதல்வரின் சிறப்பு தகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
நாடு முழுவதும் நாளை 75 ஆவது சுதந்திர தினம் கொண்டாடப்படுகிறது. சுதந்திர தினத்தையொட்டி முதல்வராக பதவியேற்றுள்ள மு.க. ஸ்டாலின் முதல் முறையாக கோட்டையில் கொடி ஏற்றவுள்ளார்.
இந்த நிகழ்வின் போது பல விருதுகள் வழங்கப்படுகிறது. இந்நிலையில், 33 பேருக்கு முதல்வர் சிறப்புப் பதக்கம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மக்கள் நல்வாழ்வுத் துறையில் 9, காவல்துறையில் 3, தீயணைப்பு துறையில் 3, நகராட்சி நிர்வாகத் துறையில் 6, வருவாய் பேரிடர் மேலாண்மை துறையில் 3, கூட்டுறவுத்துறையில் 3, உள்ளாட்சித் துறையில் 6 பேருக்கு வழங்கப்படள்ளது.
மருத்துவர்கள் ரவி, காளீஸ்வரி, சுகந்தி, விக்ரம் குமார், ஹேமாம்பிகா, ஆதித்யா, செவிலியர் கோமதி, ஆய்வக நுட்புணர்கள் ரெஸ்ட்லின், அம்மா பொண்ணுவுக்கும் முதல்வரின் சிறப்பு தகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.