#BREAKING: முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் – திட்ட ஒருங்கிணைப்பு அலுவலரை நியமித்து உத்தரவு!

முதலமைச்சரின் காலை உணவுத் திட்ட ஒருங்கிணைப்பு அலுவலராக இளம்பகவத் ஐ.ஏ.எஸ்., நியமனம்.
முதலமைச்சரின் காலை உணவுத் திட்ட ஒருங்கிணைப்பு அலுவலராக இளம்பகவத் ஐ.ஏ.எஸ்., நியமனம் செய்து பள்ளிக்கல்வித்துறை அரசாணை வெளியிட்டுள்ளது. அதன்படி தமிழ்நாட்டில் உள்ள 1,545 பள்ளிகளில் பயிலும் 1,14,095 குழந்தைகளுக்கு காலை உணவு வழங்கப்பட உள்ளது.
அரசுப் பள்ளி மாணவர்களுக்கு காலை நேரத்தில் சிற்றுண்டி வழங்கப்படும் என்று திமுக தலைமையிலான தமிழக அரசின் ஓராண்டு நிறைவையொட்டி முதல்வர் மு.க.ஸ்டாலின் சட்டப்பேரவையில் அறிவித்திருந்தார். இதில் முதல்கட்டமாக மாநகராட்சி, நகராட்சி மற்றும் தொலைதூர கிராமங்களில் உள்ள பள்ளிகளில் 1 முதல் 5-ம் வகுப்பு வரையுள்ள மாணவர்களுக்கு சிற்றுண்டி வழங்கப்பட உள்ளது.
இந்தத் திட்டத்தை செயல்படுத்த தமிழக அரசு அரசாணையும் வெளியிட்டிருந்தது. இந்த நிலையில், முதலமைச்சரின் காலை உணவுத் திட்ட ஒருங்கிணைப்பு அலுவலராக இளம்பகவத் ஐ.ஏ.எஸ்., நியமனம் செய்யப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்திற்கு ரூ.33.56 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
நெருங்கும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு..சென்னையில் வெளுத்து வாங்கும் கனமழை!
December 19, 2024
மும்பை படகு விபத்து : 13 பேர் பலி, 101 பேர் மீட்பு! மகாராஷ்டிரா முதலமைச்சர் தகவல்!
December 18, 2024
லோகேஷ் கனகராஜை கதறவிட்ட பாரத்! வெளியான சி(ரி)றப்பான வீடியோ இதோ…
December 18, 2024
“நாங்கள் அம்பேத்கருக்கு எதிரானவர்கள் அல்ல.,” அமித்ஷா விளக்கம்!
December 18, 2024