#BREAKING : ரூ.2,000 நிதியுதவி – முதலமைச்சர் அறிவிப்பு.!

Published by
Dinasuvadu desk

முடிதிருத்துவோர் நலச் சங்கத்தில் பதிவு  செய்யாத தொழிலாளர்களுக்கும் தலா ரூ. 2,000 என தமிழக  முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

கொரோனா  வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக கடந்த மார்ச் 24-ம் தேதி முதல் ஊரடங்கு அமலில் இருந்து வருகிறது. ஊரடங்கு காரணமாக பல்வேறு தரப்பு தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால், அவர்களின் நலனை கருத்தில் கொண்டு மத்திய மாநில அரசுகள் பல்வேறு நிதி உதவிகளை அறிவித்து வருகிறது.

இந்நிலையில், முடித்திருத்துவோர் நலவாரியத்தில் உறுப்பினராக உள்ள 14 ஆயிரத்து 667 நபர்களுக்கு இரண்டு தவணைகளாக தலா ரூ.1,000 நிதி வழங்கப்பட்டு வருகிறது. ஊரடங்கு காலத்தில் முடிதிருத்தும் தொழிலை மேற்கொள்ள மத்திய அரசு அனுமதி கொடுக்காததால் முடிதிருத்துவோர் நலவாரியத்தில் பதிவு செய்யாத  நபர்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது.

இதைதொடர்ந்து,  முடிதிருத்துவோர் நலவாரியத்தில் பதிவு செய்யாத  நபர்களுக்கு தமிழக அரசு நிவாரணத் தொகை அறிவித்துள்ளது. இதனால், முடிதிருத்தும் தொழில் ஈடுபட்டுள்ள பதிவு பெறாத தொழிலாளர்கள் கிராமப்புறங்களில் சம்பந்தப்பட்ட கிராம நிர்வாக அலுவலரிடம், பேரூராட்சி பகுதியில் சம்பந்தப்பட்ட பேரூராட்சி நிர்வாக அலுவலரிடம்,  நகராட்சி மற்றும் மாநகராட்சி பகுதியில் மண்டல அலுவலரிடம்,  மனுவாக சமர்ப்பிக்கவேண்டும்.

மனுக்களை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஆய்வு செய்து மாவட்ட ஆட்சியரும் பரிந்துரை செய்து, பின்னர் நல வாரியத்தில்நலவாரியத்தில் பதிவு செய்யாத  நபர்களுக்கு ரூபாய் 2,000 வழங்க வேண்டும் என முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.

Published by
Dinasuvadu desk

Recent Posts

மாணவர்களுக்கு குட் நியூஸ்! தென்காசியில் இன்று பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிப்பு!

தென்காசி : கடந்த நவ-20 (புதன்கிழமை) இரவு முழுவதும் இடைவிடாது கனமழை பெய்தது. தொடர்ந்து பெய்த கனமழையின் காரணமாக தென்காசி…

17 minutes ago

“2026 தேர்தல் முக்கியம்., ரிப்போர்ட் கார்டு வேண்டும்!” மு.க.ஸ்டாலின் திட்டவட்டம்!

சென்னை : இன்று (நவம்பர் 22) சென்னை அண்ணா அறிவாலயத்தில் தமிழக முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக…

9 hours ago

கூகுள் குரோம் பயனர்களே உஷார்! எச்சரித்த மத்திய அரசு!

டெல்லி : உலகளவில் பெரும்பாலான ஸ்மார்ட் போன் பயன்பாட்டாளர்களின் இணையவழி தேடல் எஞ்சினாக செயல்பட்டு வருகிறது கூகுள் குரோம். இந்த…

11 hours ago

மாணவர்களை கால் அழுத்திவிட கூறிய ஆசிரியர்! சஸ்பெண்ட் செய்த கல்வி அதிகாரி!

சேலம் : பள்ளி மாணவர்களை பள்ளிகளில் வேலை வாங்கும் நிகழ்வுக்கு அவ்வபோது உயர் கல்வி அதிகாரிகள் நடவடிக்கைகள் எடுத்து வந்தாலும்,…

12 hours ago

நாளை தவெக தலைவர் விஜய் வைக்கும் விருந்து! யார் யாருக்கு தெரியுமா?

சென்னை : கடந்த அக்டோபர் 27ஆம் தேதி விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் உள்ள வி.சாலை பகுதியில் தமிழக வெற்றிக் கழகம்…

12 hours ago

“மீனவர்கள் ஆழ்கடலுக்குச் செல்ல வேண்டாம்” – வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

சென்னை : தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் இன்று ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது.…

13 hours ago