#BREAKING: முதல்வர் வேட்பாளரை அதிமுகவே தீர்மானிக்கும் – சி.டி.ரவி
முதல்வர் வேட்பாளரை அதிமுகவே தீர்மானிக்கும் என்று பாஜகவின் தமிழக பொறுப்பாளர் சி.டி.ரவி பேட்டியளித்துள்ளார்.
தமிழகத்தில் அதிமுக பெரும்பான்மையான கட்சி என்பதால் முதல்வர் வேட்பாளரை அதிமுகவே தீர்மானிக்கும் என பாஜக தேசிய பொதுச்செயலாளரும், தமிழக பொறுப்பாளருமான சி.டி.ரவி திருச்சியில் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார். முதல்வர் பழனிச்சாமி மற்றும் துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் எங்களை ஆதரிக்கின்றன. கே.பி.முனுசாமி கருத்தை பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை.
இதனிடையே, கூட்டணியின் முதல்வர் வேட்பாளரை மத்திய தலைமை தான் அறிவிக்கும் என தமிழக பாஜக மாநில தலைவர் எல் .முருகன் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடப்படுகிறது. இந்நிலையில், முதல்வர் வேட்பாளராக எடப்பாடி பழனிச்சாமியை அதிமுக ஏற்கனவே அறிவித்த நிலையில், தற்போது தமிழக பாஜக பொறுப்பாளர் சி.டி.ரவி தெரிவித்துள்ளார்.