சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் பதவிக்கு விருப்ப மனு தாக்கல் செய்தார் மு.க. ஸ்டாலின்.
திமுக உட்கட்சித் தேர்தலில் தலைவர் பதவிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வேட்புமனு தாக்கல் செய்தார். திமுக தலைவர் தேர்தலில் போட்டியிட முதலமைச்சர் ஸ்டாலின் வேட்புமனு தாக்கல் செய்யப்படுவதற்கு முன்பு சென்னை மெரினா கடற்கரையில் உள்ள மறைந்த முன்னாள் முதலமைச்சர்கள் அண்ணா, கலைஞர் நினைவிடங்களில் முதலமைச்சர் முக ஸ்டாலின் மலர்தூவி மரியாதை செலுத்தினார். இதையடுத்து, திமுக தலைவர் பதவிக்கு போட்டியிட முதலமைச்சர் ஸ்டாலின் அண்ணா அறிவாலயம் சென்று வேட்புமனு தாக்கல் செய்தார்.
திமுக தலைவர் தேர்தலில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் அமைச்சர் நாசர் தலைமையில் 34 பேர் ஸ்டாலின் தலைவராக வேண்டுமென விருப்பமனு தாக்கல் செய்தனர். இதுபோன்று அமைச்சர்கள் உள்ளிட்ட பலரும் ஸ்டாலின் தலைவராக வேண்டுமென விருப்ப மனுக்களை அளித்து வருகின்றனர். எனவே, 2வது முறையாக திமுக தலைவராக முதல்வர் ஸ்டாலின் தேர்வு செய்யப்பட உள்ளார். மேலும், திமுக பொதுச்செயலாளர் பதவிக்கு துரைமுருகன், பொருளாளர் பதவிக்கு டிஆர் பாலுவும் வேட்புமனு தாக்கல் செய்தனர்.
சென்னை அமந்தகரையில் நாளை மறுநாள் திமுக பொதுக்குழு கூட்டம் நடைபெற உள்ளது. இந்த பொதுக்குழு கூட்டத்தின்போது, திமுக தலைவர், பொதுச்செயலாளர், பொருளாளர் பதவிகளுக்கு தேர்தல் நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
அமெரிக்கா : நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை அமெரிக்காவின் அடுத்த அதிபரை தேர்ந்தெடுக்க தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. உலக நாடுகள்…
பெரு : பெரு நாட்டில் Juventud Bellavista மற்றும் Familia Chocca ஆகிய இரண்டு கிளப்புகளுக்கு இடையில் Huancayoவில் இடம்பெற்ற…
சென்னை : மதுரையில் பிறந்த நிவேதா பெத்துராஜ் 11 வயது முதல் துபாயில் வசித்து வந்தார். அங்கேயே படிப்பை முடித்துவிட்டு மாடலிங்…
சென்னை : இன்று (நவம்பர் 4) சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் மதுராந்தகம் அருகே சிறுநாகலூர் பகுதியில் மதுராந்தகம்…
உத்தரப்பிரதேசம் : ஆக்ரா அருகேIAF-ன் MiG-29 ரக போர் விமானம் விபத்துக்குள்ளாகி தீப்பற்றி எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. பஞ்சாப் மாநிலம்…
சென்னை : கட்சி சேர என்ற ஆல்பம் பாடலுக்கு இசையமைத்துப் பாடியதால் ஓவர் நைட்டில் பிரபலமானவர் தான் சாய் அபியங்கர்.…