#BREAKING : உயிரிழந்த பெண் காவலர் குடும்பத்திற்கு மேலும் ரூ.15 லட்சம் வழங்க முதல்வர் உத்தரவு…!

Default Image

முதல்வர் மு.க.ஸ்டாலின் உயிரிழந்த பெண் காவலர் குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் நிதியுதவி அறிவித்திருந்த நிலையில், மேலும் ரூ.15 லட்சம் நிதியுதவி வழங்குமாறு  உத்தரவிட்டுள்ளார்.

தமிழகத்தில் பல மாவட்டங்களில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. அந்த வகையில் சென்னையிலும் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இந்நிலையில், சென்னை தலைமை செயலகத்தில் முதல்வரின் தனிப்பிரிவு அருகே பெரிய மரம் சாய்ந்து விழுந்தது. இதில், அரக்கோணத்தை சேர்ந்த பெண் காவலர் கவிதா  உயிரிழந்துள்ளார்.

மேலும், பெரியமரம் சாய்ந்து விழுந்ததில் ஒரு போக்குவரத்து காவலர் காயமடைந்த நிலையில், 2 கார்களும் சேதமடைந்துள்ளன. இதனையடுத்து, அங்கு மரத்தை அகற்றும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. முதல்வர் மு.க.ஸ்டாலின் உயிரிழந்த பெண் காவலர் குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் நிதியுதவி அறிவித்திருந்த நிலையில், மேலும் ரூ.15 லட்சம் நிதியுதவி வழங்குமாறு  உத்தரவிட்டுள்ளார். அதே போல், காயமடைந்த காவலர் முருகன் மற்றும் தீயணைப்பு வீரர் செந்தில் குமாருக்கு தலா ரூ.5 லட்சம் நிதியுதவி வழங்குமாறு உத்தரவிட்டுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்