#BREAKING : புதிய நீர் சேமிப்பு கட்டுமானங்களை அமைக்க முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவு…!
மழை காலத்தில் கிடைக்கும் நீரை முழுமையாக சேமித்து பயன்படுத்த அணைகள் இல்லா மாவட்டங்களில் புதிய நீர் சேமிப்பு கட்டுமானங்கள் அமைத்திட முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தல்.
சென்னை தலைமை செயலகத்தில் நீர்வளத்துறை ஆய்வு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில், ,உதல்வர் மு.க.ஸ்டாலின் நீர் ஆதாரங்களை அதிகரிக்க புதிய நீர் நிலைகளை உருவாக்கிடவும், மழை காலத்தில் கிடைக்கும் நீரை முழுமையாக சேமித்து பயன்படுத்த அணைகள் இல்லா மாவட்டங்களில் புதிய நீர் சேமிப்பு கட்டுமானங்கள் அமைத்திடவும் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார்.