#BREAKING : சென்னையில் அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார் முதல்வர் மு.க.ஸ்டாலின்…!
தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை சார்பாக, 50,000 அமைப்புசாரா தொழிலார்களுக்கு, முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் நலத்திட்ட உதவிகளை வழங்கியுள்ளார்.
சென்னை ராயப்பேட்டையில், ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில், தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை சார்பாக, 50,000 அமைப்புசாரா தொழிலார்களுக்கு, முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் நலத்திட்ட உதவிகளை வழங்கியுள்ளார்.
இந்த அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு, திருமணம், கல்வி, கண்கண்ணாடி ஓய்வூதியம், மகப்பேறு நிதியுதவி மற்றும் குடும்ப ஓய்வொஓதியம் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை வழங்கியுள்ளார். சுமார் ரூ.34 கோடி மதிப்பில் நத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளது. தொழிலாளர் நலத்துறை அமைச்சர் கணேசன், அமைச்சர் மா.சுப்பிரமணியன் உள்ளிட்ட அமைச்சர்கள் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.