#BREAKING: பூஸ்டர் டோஸ் செலுத்திக்கொண்ட முதல்வர் மு.க.ஸ்டாலின்..!
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொரோனாவுக்கான பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்திக்கொண்டார்.
கிறிஸ்துமஸ் பண்டிகை அன்று நாட்டு மக்களிடம் உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி, அப்போது, ஜனவரி 3 ஆம் தேதி 15 வயது முதல் 18 வயதிற்குட்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடும் பணிகள் தொடங்கும் எனவும், பூஸ்டர் டோஸ் ஜனவரி 10 ஆம் தேதி முதல் போடப்படும் என அறிவித்தார்.
இதற்கிடையில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடந்த ஆண்டு முதல், இரண்டாவது தவணைகள் தடுப்பூசி செலுத்திக்கொண்டார். இந்நிலையில், இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பூஸ்டர் தடுப்பு ஊசி செலுத்தி கொண்டார். முதல்வர் சென்னை காவேரி மருத்துவமனையில் பூஸ்டர் தடுப்பு ஊசி எடுத்துக் கொண்டார்.
இதுகுறித்து தனது ட்விட்டரில் முதல்வர், முன்களப் பணியாளர் என்ற முறையில் இன்று #BoosterDose எடுத்துக் கொண்டேன். அனைத்து முன்களப் பணியாளர்களும், இணை நோய்கள் கொண்ட 60 வயது நிரம்பிய மூத்த குடிமக்களும் தவறாமல் பூஸ்டர் டோஸ் செலுத்திக் கொள்ளுங்கள். தடுப்பூசி எனும் கவசத்தைக் கொண்டு நம்மையும் காப்போம்; நாட்டையும் காப்போம் என பதிவிட்டுள்ளார்.
முன்களப் பணியாளர் என்ற முறையில் இன்று #BoosterDose எடுத்துக் கொண்டேன்.
அனைத்து முன்களப் பணியாளர்களும், இணை நோய்கள் கொண்ட 60 வயது நிரம்பிய மூத்த குடிமக்களும் தவறாமல் பூஸ்டர் டோஸ் செலுத்திக் கொள்ளுங்கள்.
தடுப்பூசி எனும் கவசத்தைக் கொண்டு நம்மையும் காப்போம்; நாட்டையும் காப்போம்! pic.twitter.com/8ALfypb2Uh
— M.K.Stalin (@mkstalin) January 11, 2022