#BREAKING : வேளச்சேரி மேம்பாலத்தை திறந்து வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்…!

Default Image

கோயம்பேடு விஜயநகர் சந்திப்பில் ரூ.108 கோடியில் கட்டப்பட்டுள்ள, புதிய மேம்பாலத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் திறந்து வைத்துள்ளார். 

சென்னை வேளச்சேரியில் கடந்த 2015ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் மேம்பாலம் கட்டும் பணி தொடங்கிய நிலையில், இந்த கட்டுமான பணியை 2018 ஆம் ஆண்டு முடிக்க திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் கடும் போக்குவரத்து நெரிசல் உள்ளிட்ட பல காரணங்களால் மேம்பாலம் கட்டி முடிக்கும் பணியில் காலதாமதம் ஏற்பட்டது.

அதனைத் தொடர்ந்து கட்டுமான பணிகள் துரிதமாக நடைபெற்று வந்ததை அடுத்து, மேம்பாலம் தற்போது கட்டி முடிக்கப்பட்டுள்ளது. கோயம்பேடு விஜயநகர் சந்திப்பில் ரூ.108 கோடியில் கட்டப்பட்டுள்ள, புதிய மேம்பாலத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் திறந்து வைத்துள்ளார்.

வேளச்சேரியில் கட்டப்பட்டுள்ள ஈரடுக்கு மேம்பாலத்தில், 2-ஆம் அடுக்கு மேம்பாலத்தை முதல்வர் திறந்து வைத்துள்ளார். தரமணி முதல் 100 அடி சாலை வரை 1,028 மீட்டர் நீளம், 13.5 மீட்டர் உயரத்தில் மேம்பாலம் கட்டப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்