#BREAKING : முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றார் நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன்…!
முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் வாழ்த்து பெற்றார்.
இன்று காலை 10 மணிக்கு சென்னை வாலாஜா சாலையில் உள்ள கலைவாணர் அரங்கில் தமிழக சட்டப்பேரவை கூட்டம் நடைபெறுகிறது. திமுக தமிழகத்தில் ஆட்சி பொறுப்பேற்ற பின், தமிழக அரசின் 2021-22 நிதியாண்டுக்கான முழுமையான திருத்திய நிதிநிலை அறிக்கை தாக்கல் இன்னும் சற்று நேரத்தில் செய்யப்படுகிறது.
தமிழகத்தில் முதல்முறையாக காகிதமில்லா இ-பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் நிலையில், நிதியமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன், தனது முதல் பட்ஜெட்டை இன்று தாக்கல் செய்கிறார். இதனையடுத்து, முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் வாழ்த்து பெற்றார்.