ஓதுவார் பள்ளி மாணவர்களுக்கு தலா ரூ.3,000 ஊக்கத்தொகை வழங்கும் திட்டத்தை துவக்கி வைத்த முதலமைச்சர் மு.க ஸ்டாலின்.
தமிழகத்தில் ஓதுவார் பள்ளி மாணவர்களுக்கு தலா ரூ.3,000 ஊக்கத்தொகை வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் முக ஸ்டாலின் தொடங்கி வைத்தார். சென்னை தலைமை செயலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பள்ளியில் சேர தேர்வான மாணவர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கி முதல்வர் துவக்கி வைத்தார்.
அர்ச்சகர், ஓதுவார், இசை கற்போர் பயிற்சி பள்ளிகளில் சேரும் மாணவர்களுக்கு ரூ.3,000 ஊக்கத்தொகை வழங்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது. இதனிடையே, தமிழகத்தில் மதுரை மீனாட்சி அம்மன், திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோயில்கள் சார்பில் ஓதுவார் பயிற்சி பள்ளி செயல்படுகிறது.
அதன்படி, ஓதுவார் பயிற்சி பள்ளியில் 3 ஆண்டு கால படிப்பு முடிந்தவுடன் சான்றிதழ் வழங்கப்படுகிறது. ஆனால், கடந்த 3 ஆண்டு காலமாக ஓதுவார் பயிற்சி பள்ளியில் மாணவர் சேர்க்கை நடத்தப்படாமல் இருந்த நிலையில், திமுக ஆட்சிக்கு வந்த பிறகு பயிற்சி பள்ளியில் மீண்டும் மாணவர் சேர்க்கை நடத்த முடிவு செய்யப்பட்டிருந்தது.
பயிற்சி பள்ளியில் சேர விரும்பும் மாணவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் பெறப்பட்டு, அவை பரிசீலிக்கப்பட்டு மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இதற்கிடையில், ஓதுவார் பயிற்சி பள்ளி மாணவர்களுக்கு ஊக்கத்தொகை ரூ.1000 வழங்கப்பட்டு வந்த நிலையில், அவை ரூ.3000 உயர்த்தப்படும் என்று இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு அறிவித்திருந்த நிலையில், இத்திட்டத்தை முதலமைச்சர் மு.க ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
ராபட் : ஃபிபா (FIFA) உலககோப்பை கால்பந்து போட்டியானது 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும். இறுதியாக ஃபிபா உலக கோப்பையை…
அலகாபாத் : உத்திர பிரதேச மாநிலம் அலகாபாத் மாவட்டத்தில் பிரயாக்ராஜ் பகுதியில் திரிவேணி சங்கமத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் மகா…
காசா : கடந்த 15 மாதங்களாக தொடர்ந்து வந்த இஸ்ரேல் ஹமாஸ் போர் தற்போது முதற்கட்டமாக போர் நிறுத்தத்தை தொடங்கியுள்ளது.…
சென்னை : தமிழகத்தில் வடகிழக்கு பருவமழையானது வழக்கமாக அக்டோபரில் தொடங்கி டிசம்பர் வரை பெய்யும். தற்போது வடகிழக்கு பருவமழையின் தாக்கம்…
காஞ்சிபுரம் : சென்னை விமான நிலையத்தை அடுத்து, காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூர் பகுதியில் புதிய விமான நிலையம் அமைக்கும் திட்டத்தை…
டெல் அவில் : கடந்த 15 மாதங்களாக தொடர்ந்து வந்த இஸ்ரேல் - ஹமாஸ் போரானது இன்று முதல் 6…