மக்களை தேடி மருத்துவம் திட்டத்தை தொடங்கி வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்.
இன்று பலரும் நீரழிவு, ரத்த அழுத்தம் போன்ற நாள்பட்ட நோயால் பாதிக்கப்பட்டு அரசு மருத்துவமனைகளில் மாதந்தோறும் சிகிச்சை பெற்று வருவதோடு, மாத்திரைகளும் சாப்பிட்டு வருகின்றனர். மேலும் சிறுநீரக செயலிழப்பால் ஏராளமானோர் வாரத்துக்கு ஒரு முறையாவது டயாலிஸிஸ் செய்து வருகின்றனர்.
இந்த நோயாளிகளில் பலர் பல காரணங்களால் முறையாக தொடர்ச்சியான சிகிச்சை எடுத்துக் கொள்வதில்லை இதனால் ஆண்டுக்கு சராசரியாக 5 லட்சம் பேர் உயிரிழப்பதாக கூறப்படுகிறது. எனவே இப்படிப்பட்ட நோயாளிகளை கண்டறிந்து அவர்களுக்கு வீடு வீடாக சென்று மருத்துவ சிகிச்சை அளித்து தேவையான மருந்து மாத்திரைகளை வழங்குவதற்கும், டயாலிசிஸ் சிகிச்சை தேவைப்படுவோருக்கு கையடக்க கருவிகளுடன் வீடுகளுக்கு நேரில் சென்று சிகிச்சை அளிப்பது, பிசியோதெரபி சிகிச்சை தேவைப்படுவோருக்கு பிசியோதெரபி சிகிச்சை அளித்தல் உள்ளிட்ட சிகிச்சைகளை அளிப்பதற்காக மக்களை தேடி மருத்துவம் என்ற திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், கிருஷ்ணகிரி மாவட்டம், சமன்பள்ளியில், ‘மக்களை தேடி மருத்துவம்’ திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தொடங்கி வைத்துள்ளார். அதன்படி, நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டுள்ள சரோஜாவின் இல்லத்திற்கே சென்று மருந்து மாத்திரைகளை வழங்கினார்.
மேலும்,பக்கவாதம் நோயால் பாதிக்கப்பட்டுள்ள சந்திரசேகரின் இல்லத்திற்கே சென்று மருந்து, மாத்திரைகளை வழங்கினார். அதேபோல், மூக்கனூரை சேர்ந்த கால்கள் இழந்த இருவருக்கு செயற்கை கால்களை வழங்கினார். அதனை தொடர்ந்து, சூளகிரி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான 108 ஆம்புலன்ஸையும் வழங்கியுள்ளார். இந்தியாவிலேயே முதன்முறையாக இத்திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
டெல்லி : கடந்த 2 நாட்களாக நாடாளுமன்ற வளாகம் மிக பரபரப்பாக இயங்கி வருகிறது. அதிலும் இன்று நாடாளுமன்ற வளாகத்தில்…
ஆத்தி மரத்தின் சிறப்புகளையும் அதன் ஆரோக்கிய நன்மைகளையும் இந்த செய்தி குறிப்பில் பார்க்கலாம். சென்னை : ஆத்தி மரத்தை இடிதாங்கி…
சென்னை : நாளை (டிசம்பர் 20) வெற்றிமாறன் இயக்கத்தில், விஜய் சேதுபதி, சூரி நடித்துள்ள விடுதலை படத்தின் 2ஆம் பாகம்…
சென்னை : காலகலப்பு திரைப்படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் நடிகர் நடிகர் கோதண்டராமன். இவர் கடந்த சில நாட்களாகவே உடல் நிலை…
டெல்லி : இன்று நாடாளுமன்ற வளாகமே பரபரப்புக்கு பஞ்சமில்லாமல் இயங்கி வருகிறது. ஒருபக்கம், அம்பேத்கரை அமித்ஷா அவமதித்துவிட்டார் என காங்கிரஸ்…
ஆருத்ரா தரிசனம் என்றால் என்ன அதன் பலன்கள் மற்றும் சிறப்புகளை இந்த செய்து குறிப்பில் காணலாம் . சென்னை :சிவபெருமானுக்கு…