#BREAKING: யு.ஏ.இ அமைச்சர்களுடன், முதலமைச்சர் மு.க ஸ்டாலின் ஆலோசனை!

ஐக்கிய அரபு அமீரக அமைச்சர்களுடன், தமிழ்நாடு முதலமைச்சர் முக ஸ்டாலின் ஆலோசனை.
தமிழகத்துக்கு முதலீடுகளை ஈர்ப்பதற்காக 4 நாள் அரசு பயணமாக நேற்று துபாய் சென்றார் முதலமைச்சர் மு.க ஸ்டாலின். அரசு முறை பயணமாக துபாய் சென்றுள்ள முதலமைச்சர் முக ஸ்டாலின் ஐக்கிய அரபு அமீரக அமைச்சர்களை சந்தித்துள்ளார். இந்த நிலையில், உலக வர்த்தக கண்காட்சியில் பங்கேற்க துபாய் சென்றுள்ள முதலமைச்சர் மு.க ஸ்டாலின் ஐக்கிய அரபு அமீரக அமைச்சர்களுடன், ஆலோசனை நடத்தி வருகிறார்.
ஐக்கிய அரபு அமீரகத்தின், பொருளாதாரம், வர்த்தகத்துறை உள்ளிட்ட அமைச்சர்களுடன் முதலமைச்சர் முக ஸ்டாலின் ஆலோசனை நடத்துகிறார். அதன்படி, அமீரக அமைச்சர்கள் தானி பின் அகமது அல் ஸீயோதி, அப்துல்லா பின் டூக் அல் மர்ரி ஆகியோருடன் முதல்வர் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார். முதல்வரின் ஆலோசனையில் தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, செயலாளர் கிருஷ்ணன் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.
லேட்டஸ்ட் செய்திகள்
LIVE : தமிழகத்தில் வெளுத்து வாங்கும் மழை முதல்..இந்தியாவுக்கு வரி விதித்த ட்ரம்ப் வரை!
April 3, 2025
டிரம்ப் அதிரடி வரி விதிப்பு.! உலக நாடுகள் கடும் எதிர்ப்பு! சீனா, கனடா, ஆஸ்திரேலியா, தைவான்….
April 3, 2025