#BREAKING : ராகுல் காந்தியை தொலைபேசியில் தொடர்பு கொண்டுபேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின்.!
கடந்த 2019-ஆம் ஆண்டு கர்நாடகாவின் கோலாறில் நடந்த பொதுத்தேர்தல் பரப்புரையில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி “எல்லா திருடர்களுக்கும் மோடி என்ற பெயர் இருக்கிறது” என்று பேசியிருந்தார். இதனையடுத்து, ராகுல்காந்திக்கு எதிராக குஜராத் பாஜக எம்எல்ஏ புர்னேஷ் மோடி சூரத் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த நிலையில், ராகுல் காந்தியை குற்றவாளியாக அறிவித்து 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து சூரத் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. பிறகு மேல்முறையீடு செய்ய ஏதுவாக ராகுல் காந்திக்கு 30 நாட்கள் ஜாமீனும் வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்நிலையில், காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியுடன் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொலைபேசி வாயிலாக பேசியுள்ளார். இப்படியான ஒரு சூழலில் ஆதரவாக பேசவேண்டும் என்பதற்காக அதன் அடிப்படையில் முதலமைச்சர் ஸ்டாலின் பேசியுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும் ஜூன் 3-ஆம் தேதி ராகுல் காந்தி அல்லது சோனியா காந்தி திருவாரூருக்கு அருங்காட்சியம் திறப்பு விழாவிற்கு வருகை தரவுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.