#BREAKING: திமுக தலைவர் பதவிக்கு போட்டியின்றி தேர்வானார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

Default Image

திமுக தலைவர் பதவிக்கு வேறு யாரும் வேட்புமனு தாக்கல் செய்யாததால், போட்டியின்றி தேர்வாகிறார் முதலமைச்சர் ஸ்டாலின்.

திமுக தலைவராக 2வது முறையாக போட்டியின்றி தேர்வானார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். தலைவர் பதவிக்கு மு.க.ஸ்டாலினை தவிர வேறு யாரும் வேட்புமனு தாக்கல் செய்யாததால் போட்டியின்றி தேர்வானார். திமுகவின் 15-ஆவது உட்கட்சி தேர்தல் பல்வேறு கட்டங்களாக நடைபெற்று தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. அவைத் தலைவர், செயலாளர், துணைச் செயலாளர்கள், பொருளாளர், செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள் உள்ளிட்ட பொறுப்புகளுக்கான தேர்தல் நடைபெற்றது.

வேட்பு மனுக்கள் பரிசீலனை செய்யப்பட்டு திமுக மாவட்டச் செயலாளர் பட்டியல் வெளியிடப்பட்டது. அதனை தொடர்ந்து, திமுகவின் 72 மாவட்டங்களில் 71 மாவட்டங்களின் நிர்வாகிகள் பட்டியலும் வெளியிடப்பட்டது. இதனைத்தொடர்ந்து, திமுக தலைவர், பொதுச்செயலாளர், பொருளாளர் பதவிகளுக்கு போட்டியிட இன்று காலை 10 மணி முதல் 5 மணி வரை அண்ணா அறிவாலயத்தில் வேட்புமனு தாக்கல் நடைபெற்றது. அதன்படி, திமுக தலைவர் பதவிக்கு போட்டியிட முதலமைச்சர் ஸ்டாலின் அண்ணா அறிவாலயம் சென்று வேட்புமனு தாக்கல் செய்தார்.

இதுபோன்று, திமுக பொதுச்செயலாளர் பதவிக்கு துரைமுருகன், பொருளாளர் பதவிக்கு டிஆர் பாலுவும் வேட்புமனு தாக்கல் செய்திருந்தனர். திமுக தலைவர் தேர்தலில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் அமைச்சர் நாசர் தலைமையில் 34 பேர் உள்ளிட்ட பலரும் ஸ்டாலின் தலைவராக வேண்டுமென விருப்ப மனுக்கள் தாக்கல் செய்தனர். திமுக தலைவர் பதவிக்கான வேட்புமனு தாக்கல் நிறைவடைந்தது. இந்த நிலையில், திமுக தலைவராக 2வது முறையாக போட்டியின்றி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தேர்வாகிறார். வேறு யாரும் தலைவர் பதவிக்கு போட்டியிடாததால் திமுக தலைவராக தேர்வாகிறார்.

இருப்பினும், சென்னை அமந்தகரையில் நாளை மறுநாள் திமுக பொதுக்குழு கூட்டம் நடைபெற உள்ளது. இந்த பொதுக்குழு கூட்டத்தின்போது, திமுக தலைவர், பொதுச்செயலாளர், பொருளாளர் பதவிகளுக்கு தேர்தல் நடைபெற உள்ளது. அப்போது தான் திமுக தலைவராக முதலமைச்சர் முக ஸ்டாலின் போட்டியின்றி தேர்வானார் என அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும். முன்னாள் முதலமைச்சரும், திமுக தலைவருமான கருணாநிதி மறைவிற்கு பிறகு கடந்த 2018-ஆம் ஆண்டு திமுகவின் தலைவராக முதலமைச்சர் முக ஸ்டாலின் பொறுப்பேற்றிருந்தார்.

அப்போது, அவசரமாக கூடிய பொதுக்குழுவில் முதலமைச்சர் ஸ்டாலின் தலைவராக தேர்வு செய்யப்பட்டார். ஆனால், முறையாக தேர்தல் நடத்தப்பட்டு தேர்வாகவில்லை. இந்த நிலையில், தற்போது முறையாக தேர்தல் நடத்தப்பட்டு, திமுகவின் தலைவராக 2வது முறையாக போட்டின்றி தேர்வாகி இருக்கிறார். இதுபோன்று, திமுக பொதுச்செயலாளர் பதவிக்கு துரைமுருகன், பொருளாளர் பதவிக்கு டிஆர் பாலுவை தவிர வேறு யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லை. இதனால், அவர்களும் போட்டியின்றி தேர்வாக உள்ளனர். இதுதொடர்பாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு நாளை மறுநாள் நடைபெறும் திமுக பொதுக்குழுவில் அறிவிக்கப்பட உள்ளது. மேலும், துணை பொதுச்செயலாளர்கள் அறிவிப்பும் பொதுக்குழுவில் வெளியிடப்படும்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்