#BREAKING: எண்ணும் எழுத்தும் திட்டத்தை தொடங்கி வைத்தார் முதலமைச்சர்!

Published by
பாலா கலியமூர்த்தி

தாகத்தை தீர்க்கும் நீர் போல கல்வி தாகத்தை தீர்க்க எண்ணும் எழுத்தும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது என முதலமைச்சர் ஸ்டாலின் பேச்சு.

தமிழகத்தில் 1 முதல் 10-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு கோடை விடுமுறை முடிந்து, இன்று மீண்டும் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன. பள்ளிகள் திறப்பை முன்னிட்டு மாணவர்களுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்த நிலையில், அரசு பள்ளிகளில் 1 முத்த 3 வகுப்புகளுக்கு எண்ணும் எழுத்தும் திட்டத்தை முதலமைச்சர் முக ஸ்டாலின் தொடங்கி வைத்தார். திருவள்ளூர் அழிஞ்சிவாக்கம் ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளியில் இந்த திட்டத்தை முதல்வர் தொடங்கி வைத்தார்.

திட்டம் தொடர்பான கைபேசி செயலி, திட்டப்பாடல் ஆகியவற்றையும் முதலமைச்சர் வெளியிட்டார். ஆசிரியர் கையேடு, சான்றிதழ், கற்றல் கற்பித்தல் உபகரணம், புத்தகங்கள் ஆகியவற்றையும் வழங்கினார். இதன்பின் இந்நிகழ்ச்சியில் பேசிய முதலமைச்சர் ஸ்டாலின், 1-3ம் வகுப்பு மாணவர்கள் எளிய முறையில் கல்வி கற்கும் வகையில் எண்ணும் எழுத்தும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. கொரோனா பெருந்தொற்று காரணமாக மாணவர்கள் நேரடியாக கற்கமுடியாத சூழல் ஏற்பட்டது.

கற்பிப்பததில் புதிய யுக்தி தேவை என்பதால் தான் எண்ணும் எழுத்தும் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. குழந்தைகள் 2025க்குள் அடிப்படை எழுத்தறிவு, எண்ணறிவை பெற வேண்டும் என்பதே நோக்கம். தொடக்க பள்ளி ஆசிரியர்களிடம் கருத்து கேட்டு எண்ணும் எழுத்தும் தோட்டம் தொடங்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு பாடத்திற்கும் தனி தனி குழுக்கள் அமைக்கப்பட்டு, இந்த திட்டத்தை செழுமைப்படுத்துவார்கள். கொரோனாவால் ஏற்பட்ட கற்றல் இழப்பை குறைக்கும் வங்கியில் இத்திட்டம் தற்போது தொடங்கப்பட்டுள்ளது.

அனைவருக்கும் கல்வி என்பது திராவிட மாடலின் நோக்கமாக இருக்கிறது. தொடந்து இந்த திட்டம் 3 ஆண்டுகள் செயல்படுத்தப்பட உள்ளது. தமிழ், ஆங்கிலம் என இரண்டு மொழிகளிலும் பயிற்சி நூல்கள் தயாரிக்கப்பட்டுள்ளன. எண்ணும் எழுத்தும் திட்டத்திற்காக தனியாக செயலி உருவாக்கப்பட்டுள்ளது. பல்வேறு வடிவங்களில் பயிற்சி அளிக்கும்படி இத்திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது என முதலமைச்சர் உரையாற்றினார். இந்த திட்டம் தொடங்கும்போது உள்ள அக்கறையும், ஆர்வமும் தொடர்ந்து நீடிக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார்.

Recent Posts

தீபாவளி கொண்டாட்டம் : திரையரங்குகளில் வெளியாகும் 3 செம திரைப்படங்கள்!

தீபாவளி கொண்டாட்டம் : திரையரங்குகளில் வெளியாகும் 3 செம திரைப்படங்கள்!

சென்னை : இந்த ஆண்டு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பெரிய நடிகர்களுடைய படங்கள் வெளியாகவில்லை என்றாலும், தீபாவளியைத் தரமாகவும் குடும்பத்துடனும்…

6 hours ago

“உன்னை மாதிரி ஒரு ரசிகனே எனக்கு வேண்டாம்” – மேக்ஸ்வெல்லை காயப்படுத்திய சேவாக்!

பஞ்சாப் : ஆஸ்திரேலியா அணியின் கிரிக்கெட் ஜாம்பவான் கிளன் மேக்ஸ்வெல் நடந்து முடிந்த 2017 ஐபிஎல் தொடரில் பஞ்சாப் அணிக்கு…

7 hours ago

தீபாவளி விருந்து : நாளை ஓடிடிக்கு வருகிறது லப்பர் பந்து!

சென்னை : நாளை தீபாவளி பண்டிகையை முன்னிட்டு என்ன படம் பார்க்கலாம் என்று தேடிக்கொண்டு இருப்பவர்களுக்கு ஒரு விருந்தாக ரப்பர்…

7 hours ago

பசும்பொன் முத்துராமலிங்க தேவர் குருபூஜை – மலர்தூவி மரியாதை செய்த தவெக தலைவர் விஜய்!

சென்னை : இன்று முத்துராமலிங்க தேவரின் 117-வது ஜெயந்தியை முன்னிட்டு, அரசியல் தலைவர்கள் பலரும் பசும்பொன்னில் உள்ள முத்துராமலிங்க தேவர்…

8 hours ago

நயன்தாரா திருமண ஆவணப்படம் எப்போது ரிலீஸ்? வெளியான அறிவிப்பு…

சென்னை : மிகவும் எதிர்பார்க்கப்பட்டநயன்தாரா - விக்னேஷ் சிவன் தம்பதியரின் திருமண ஆவணப்படமான ஆவணப்படமான "நயன்தாரா - பியோண்ட் தி…

8 hours ago

இந்த மனசு தான் சார் தங்கம்! குரங்குகளுக்கு தீபாவளி போனஸ் கொடுத்த அக்‌ஷய் குமார்!

அயோத்தி : தீபாவளியை முன்னிட்டு பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார் செய்த காரியம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. அயோத்தி ராமர்…

9 hours ago