#BREAKING: உயர்கல்விக்கு வழிகாட்டும் “கல்லூரி கனவு” நிகழ்ச்சி – துவக்கி வைத்தார் முதலமைச்சர்
தமிழகத்தில் 12ம் வகுப்பு முடித்த மாணவர்களுக்கான “கல்லூரி கனவு” நிகழ்ச்சியை முதலமைச்சர் ஸ்டாலின் தொடக்கி வைத்தார்.
நான் முதல்வன் திட்டத்தின் கீழ் 12ம் வகுப்பில் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு உயர்கல்விக்கு வழிகாட்டும் “கல்லூரி கனவு” நிகழ்ச்சியை சென்னையில் இன்று முதலமைச்சர் ஸ்டாலின் தொடக்கி வைத்தார். நான் முதல்வன் திட்டத்தின் கீழ் உயர்கல்விக்கு வழிகாட்டும் “கல்லூரி கனவு” நிகழ்ச்சியை நேரு விளையாட்டு அரங்கத்தில் தொடக்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியின் மூலம் பிரிவு வாரியான பட்டம் மற்றும் பட்டயப்படிப்பு, கல்லூரிகளை தேர்வு செய்வது குறித்து வழிகாட்டுதல் தர ஏற்பாடு செய்யபட்டுள்ளது. உயர்கல்வித்துறை, தொழில்நுட்ப கல்வி இயக்ககம், பல்கலைக்கழகங்கள் சார்பில் அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன.
அதன்படி, சென்னை நேரு விளையாட்டு அரங்கில் “கல்லூரி கனவு” நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. சென்னையில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் மேல்நிலைப்பள்ளி மாணவ, மாணவிகள் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளனர். மேலும், “கல்லூரி கனவு” நிகழ்ச்சி மற்ற மாவட்டங்களில் ஜூன் 29, 30 மற்றும் ஜூலை 1, 2 ஆகிய தேதிகளில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. உயர்கல்வி வாய்ப்பு, பிரிவு வாரியான படிப்பு, பட்டயப்படிப்பு என்னென்ன உள்ளது என்பது குறித்து வழிகாட்டுதல்கள் கிடைக்க உள்ளது. கல்லூரிகளை எவ்வாறு தேர்ந்தெடுப்பது, மேற்படிப்பை முடித்ததும் கிடைக்கும் வேலைவாய்ப்பு விவரங்களும் அறிய வாய்ப்பு அளிக்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.