முதல்வர் முக ஸ்டாலின் மார்ச் 5,6ஆம் தேதிகளில் மதுரையில் 5 மாவட்ட ஆட்சியர்களுடன் கள ஆய்வு மேற்கொளக்கிறார்.
கள ஆய்வில் முதலமைச்சர்:
தமிழ்நாட்டில் “கள ஆய்வில் முதலமைச்சர்” என்ற திட்டத்தை பிப்.1-ஆம் தேதி தொடங்கி வைத்தார். கள ஆய்வில் முதலமைச்சர் என்ற திட்டத்தின் கீழ் முதற்கட்டமாக பிப்ரவரி 1 மற்றும் 2 ஆகிய நாட்களில் வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர் மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்களில் ஆய்வு மேற்கொண்டார் முதலமைச்சர். கள ஆய்வில் கிடைக்கும் தகவல் அடிப்படையில் திட்ட செயல்பாடுகள் குறித்து ஆட்சியர்களுடன் விவாதிக்கப்படும்.
கள ஆய்வின் அம்சங்கள்:
இந்த கள ஆய்வின் போது, குடிநீர், சுகாதாரம், கல்வி, மருத்துவம், குழந்தைகள் ஊட்டச்சத்து, இளைஞர் திறன் மேம்பாடு உள்ளிட்ட அடிப்படை வசதிகள், வருவாய்த் துறை வழங்கக்கூடிய சேவைகள், ஊரக மேம்பாடு, நகர்ப்புற வளர்ச்சி, சாலை மேம்பாடு, வாழ்வாதாரத்தை உயர்த்துதல், பொதுக் கட்டமைப்பு வசதிகள் போன்ற முக்கிய துறைசார்ந்த திட்டங்களின் செயல்பாடுகள் மற்றும் அவற்றின் பயன்கள் பொதுமக்களுக்கு முழுமையாகச் சென்றடைவது குறித்து ஆய்வு செய்யப்படுகிறது.
துறைசார்ந்த அதிகாரிகளுடன் ஆலோசனை:
அண்மைக் காலமாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் “கள ஆய்வில் முதல்வர்” என்ற புதிய திட்டத்தின் மூலம் பல்வேறு மாவட்டங்களுக்கும் பயணம் மேற்கொண்டு அரசு திட்டங்களையும் பார்வையிட்டு வருகிறார். அதேபோல் துறைசார்ந்த அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டு திட்டங்களை தாமதமின்றி விரைந்து முடிக்க வேண்டும் என்றும் அரசு திட்டங்கள் முழுமையாக மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும் எனவும் அறிவுறுத்தி வருகிறார்.
5 மாவட்டங்களில் களஆய்வு:
இந்த நிலையில் , மார்ச் 5 மற்றும் 6 ஆகிய தேதிகளில் மதுரை, திண்டுக்கல் ராமநாதபுரம், சிவகங்கை, தேனி உள்ளிட்ட மாவட்டங்களில் முதலமைச்சர் முக ஸ்டாலின் கள ஆய்வு மேற்கொள்கிறார். கள ஆய்வில் முதலமைச்சர் என்ற திட்டத்தின் கீழ் 5 மாவட்டங்களில் முதலமைச்சர் முக ஸ்டாலின் ஆய்வு மேற்கொள்கிறார். அப்போது, கள ஆய்வில் முதலமைச்சர் என்ற திட்டத்தின் கீழ் 5 மாவட்டங்களில் மாவட்ட ஆட்சியர்கள், காவல் கண்காணிப்பாளர்கள், விவசாய பிரதிநிகளுடன் முதலமைச்சர் ஆலோசனை மேற்கொள்ள உள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை : தைப்பொங்கல் நாளின் மறுநாள் மாட்டுப்பொங்கல் பண்டிகை தமிழர்களால் கொண்டாட்டப்பட்டு வருகிறது. இந்த நாளில் உழவர்களின் நண்பனாக திகழும்…
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு இந்த ஆண்டுக்கான ஜல்லிக்கட்டு போட்டிகள் பல இடங்களில் நடைபெற்று வருகிறது. நேற்று மதுரை மாவட்டம் அவனியாபுரம்…
தெலுங்கானா : மாநிலம் ஹைதராபாத் - வாரங்கல் நெடுஞ்சாலையில் வியாழக்கிழமை அதிகாலை நடந்த ஒரு துயரமான சாலை விபத்து சம்பவத்தில் 2…
பீதர்: கர்நாடகா மாநிலம் பீதர் மாவட்டத்தில் ஏ.டி.எம் இயந்திரத்தில் நிரப்பப் பணம் எடுத்துச் சென்றவர்கள் மீது பட்டப்பகலில் மர்ம நபர்கள்…
சென்னை: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, 'வணங்கான்' திரைப்படம் ஜனவரி 10ஆம் தேதி அன்று திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது.…
டெல்லி : அடுத்த மாதம் சாம்பியன்ஸ் டிராபி 2025 கிரிக்கெட் தொடர் தொடங்க உள்ளது. இந்த போட்டியில் பங்கேற்கும் 8…