#Breaking : பிரதமர் மோடி நடத்தும் ஆலோசனை கூட்டத்தில் தமிழக முதல்வர் கலந்துகொள்ளவில்லை…!
கொரோனா ஆலோசனை கூட்டத்தில் முதல்வர் பழனிசாமி கலந்து கொள்ளவில்லை என தகவல்கள் வெளியாகியுள்ளது.
மஹாராஷ்டிரா, தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களில் கொரோனா தொற்று அதிகரித்து வருவதை தொடர்ந்து, மாநில முதல்வர்களுடன், பிரதமர் மோடி காணொலி மூலம் ஆலோசனை நடத்தவுள்ளார். இந்த ஆலோசனை கூட்டத்தில், கொரோனா தடுப்பு நடவடிக்கைகள், தடுப்பூசி போடும் பணி உள்ளிட்டவை குறித்து ஆலோசனை மேற்கொள்ளவுள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், இந்த ஆலோசனை கூட்டத்தில் முதல்வர் பழனிசாமி கலந்து கொள்ளவில்லை என தகவல்கள் வெளியாகியுள்ளது. முதல்வர் தேர்தல் பிரச்சாரத்தில் இருப்பதால் கலந்து கொள்ளவில்லை என்றும், அவருக்கு பதிலாக தலைமை செயலர் ராஜிவ் ரஞ்சன் சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷணன் ஆகியோர் கலந்து கொள்ள உள்ளதாக கூறப்படுகிறது.