#BREAKING : அணை பாதுகாப்பு மசோதா நிறைவேற்றப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்த முதல்வர்..!
அணை பாதுகாப்பு மசோதா நிறைவேற்றப்பட்டதற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.
டெல்லியில், பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் கடந்த 29-ந்தேதி தொடங்கியது. இக்கூட்டமானது டிச.23-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. முதல் நாளிலேயே மூன்று வேளாண் சட்டம் ரத்து மசோதா தாக்கல் செய்யப்பட்டு, அன்றைய தினமே சட்டமாக நிறைவேற்றப்பட்டது.
இதனை தொடர்ந்து நேற்று, அணை பாதுகாப்பு மசோதா மக்களவையை தொடர்நது மாநிலங்களவையிலும் நிறைவேற்றப்பட்டுள்ளது. நீண்ட விவாதத்திற்கு பின், மாநிலங்கவையிலும் குரல் வாக்கெடுப்பு மூலம் மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது. நாடாளுமன்ற் இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்ட மசோதா குடியரசு தலைவர் ஒப்புதலுக்காக அனுப்பப்படவுள்ளது.
இந்நிலையில், அணை பாதுகாப்பு மசோதா நிறைவேற்றப்பட்டதற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் பெரும்பானமையால் ஒன்றிய பாஜக அரசு அதிகாரத்தை தவறாக பயன்படுத்துகிறது. மாநில அரசுகளின் அடிப்படை உரிமையை பறிக்கும் ஒன்றிய அரசின் செயல் மிகவும் சர்வாதிகாரமானது. அணைப் பாதுகாப்புச் சட்டத்தை பாஜக அரசு கொண்டு வந்திருப்பது ஒன்றிய-மாநில அரசுகளுக்கு இடையிலான உறவில் சறுக்கலாக அமைந்திருக்கிறது என தெரிவித்துள்ளார்.