#BREAKING: வரைவு வாக்காளர் பட்டியலை வெளியிட்டார் தலைமை தேர்தல் அதிகாரி!
தமிழகத்தில் 6 கோடியே 18 லட்சத்து 26 ஆயிரத்து 182 வாக்காளர்கள் உள்ளனர் என தலைமை தேர்தல் அதிகாரி அறிவிப்பு.
சென்னையில் மிதிவண்டி பேரணியை தொடங்கி வைத்த பின் செய்தியாளர்களிடம் பேசிய தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு, தமிழகத்திற்கான வரைவு வாக்காளர் பட்டியலை வெளியிட்டார். தமிழகத்தில் மொத்தம் 6.18 கோடி வாக்காளர்கள் உள்ளனர். இதில், 3.14 கோடி பெண் வாக்காளர்கள், 3.03 கோடி ஆண் வாக்காளர்கள் உள்ளனர். மூன்றாம் பாலின வாக்காளர்கள் 7,758 பேர் உள்ளனர்.
தமிழகத்தில் ஆணைகளை விட பெண் வாக்காளர்கள் அதிகம். அதிகபட்சமாக சோழிங்கநல்லூர் தொகுதியில் 6.6 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர். தமிழகத்தில் குறைந்தபட்சமாக துறைமுகம் தொகுதியில் 1.72 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர்.
கடந்த சட்டமன்ற தேர்தலை ஒப்பிடுகையில் சுமார் 17 .69 லட்சம் வாக்காளர்கள் பட்டியலில் இருந்து நீக்கம் செய்யப்பட்டனர். இதில், இறந்த வாக்காளர்கள் 2.44 லட்சம் பேர், இரட்டை பதிவு வாக்காளர்கள் 15.25 லட்சம் பேர் நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். வாக்காளர் பட்டியலில் திருத்தம் செய்ய சென்னையில் 12, 13, 26, 27 ஆகிய தேதிகளில் சிறப்பு முகாம் நடைபெறும் எனவும் தெரிவித்தார். மேலும்,
டிச.8-ஆம் தேதி வரை வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கலாம் எனவும் கூறினார்.