சென்னை ஆர்.ஏ.புரத்தில் பெரும்பாலான ஏழை மற்றும் நடுத்தர மக்கள் வசித்து வரும் நிலையில்,அப்பகுதியில் உள்ள வீடுகள் ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ளதாக கூறி மாநகராட்சி நிர்வாகத்தில் இடிக்கப்பட்டு வருகின்றன.
ஆனால்,இதனை கண்டித்து அப்பகுதி மக்கள் அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு வந்த நிலையில்,தன்னுடைய வீடு இடிக்கப்படுவதை கண்டித்து அப்பகுதியில் வசித்து வந்த முதியவர் ஒருவர் நேற்று தீக்குளித்தார்.பின்னர்,உடனடியாக,தீ அணைக்கப்பட்டு முதியவர் மருத்துவமனையில் ஐசியூவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில்,சிகிச்சை பலனின்றி நேற்று காலை உயிரிழந்தார்.
இதனைத் தொடர்ந்து,வீடுகளை இடிக்கும் பணிகள் நிறுத்தி தற்காலிகமாக வைக்கப்பட்டுள்ளன.மேலும்,வீடுகள் இடிக்கப்படுவதற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டது.இந்நிலையில், இந்த வழக்கு உச்சநீதிமன்ற நீதிபதி கன்வில்கர் தலைமையில் இன்று விசாரணைக்கு வந்தது.அப்போது,சென்னை ஆர்.ஏ.புரத்தில் ஆக்கிரமிப்பு அகற்றும் பணிகளை நிறுத்த உத்தரவிடப்போவதில்லை என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.
சென்னை ஆர்.ஏ.புரத்தில் ஆக்கிரமிப்பு அகற்றுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஒருவர் தற்கொலை செய்து கொண்டிருக்கிறார்.மேலும், மாணவர்கள் பொதுத்தேர்வுக்கு தயாராகி வருகிறார்கள்.இந்த நிலையில், ஆக்கிரமிப்பை அகற்றும் பணிகளை தற்காலிகமாக நிறுத்தி வைக்க வேண்டும்.எங்களுக்கான மாற்று இடம் அவகாசம் வழங்க வேண்டும் என மனுதாரர் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.
இதனால் கடுமையாக கோபம் அடைந்த நீதிபதிகள்:”2011 ஆம் ஆண்டே இடத்தை காலி செய்யவேண்டும் என்று தீர்ப்பு வழங்கப்பட்டது. ஆனால்,இத்தனை ஆண்டுகள் ஆக்கிரமிப்புகள் அகற்றப்படாமல் இருந்துள்ளது.
அதனபடி,ஆக்கிரமிப்பாளர்கள் காலி செய்ய தேவையான நேரம் கொடுக்கப்பட்டுள்ளது.எனவே,எங்களது உத்தரவு நீர்த்துப்போவதை விரும்பவில்லை.தேவையான காவல்துறையினரின் பாதுகாப்புடன் ஆக்கிரமிப்பு நடவடிக்கை எடுக்கப்படவேண்டும்.
மேலும்,தற்போது முதல்வர் ஸ்டாலின் இந்த விவகாரத்தில் மிகவும் சென்சிடிவ் ஆக உள்ளார்.அதன்படி,மாற்று இடங்கள் வழங்கப்படும் என்ற உறுதியினை கொடுத்துள்ளார்.முதலில் அந்த மாற்று இடங்களுக்கான ஆவணங்களை பெற்றுக்கொண்டு,உச்சநீதிமன்றதின் தீர்ப்புக்கு மதிப்பு அளியுங்கள்.உங்களது கண்ணாமூச்சி ஆட்டங்களை நிறுத்தி கொள்ளுங்கள்”,என்று தெரிவித்து மனுவை தள்ளுபடி செய்துள்ளனர்.இந்த அறிவிப்பால்,சென்னை ஆர்.ஏ.புரம் மக்களுக்கு பெரும் அதிர்ச்சியை அளித்துள்ளது.
மெல்போர்ன் : ஆஸ்ரேலியாவுக்கு எதிரான இந்த 4-வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் முக்கிய வீரர்களான ரோகித் சர்மா (3),…
டெல்லி : மாநிலத்தில் பல பகுதிகளில் கனமழை பெய்த காரணத்தால் சில இடங்களில் வெள்ளம் ஏற்பட்டது. குறிப்பாக டெல்லி என்சிஆர்…
சென்னை : அடுத்த ஆண்டு (2025) ஜனவரி 14ம் தேதி (செவ்வாய்க்கிழமை) பொங்கல் பண்டிகை கொண்டாடப்படவுள்ளது. இதனையடுத்து, தமிழர் திருநாளாம்…
சென்னை : சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவிக்கு நடந்த பாலியல் வன்கொடுமை சம்பவம் தமிழகத்தை உலுக்கியுள்ளது. மாணவி கொடுத்த புகாரின்…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவருக்கு நடந்த பாலியல் வன்கொடுமை சம்பவம் தமிழகத்தையே உலுக்கியுள்ள நிலையில், இந்த…
சென்னை : பாமக பொதுக்குழு அந்த கூட்டத்தில் இளைஞரணி தலைவர் நியமனம் செய்யப்படுவது தொடர்பாக ராமதாஸ்- அன்புமணி இடையே வார்த்தை மோதல்…