#Breaking: மருத்துவர்களை இடமாற்றம் செய்த உத்தரவு ரத்து-சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு
- சென்னை உயர்நீதிமன்றம், போராட்டத்தில் ஈடுபட்ட மருத்துவர்களை இடமாற்றம் செய்த உத்தரவு ரத்து என்று தீர்ப்பு அளித்துள்ளது.
- தமிழக அரசு மருத்துவர்களுக்கு போராட்டம் நடத்த உரிமை இல்லை என்றும் அரசு மருத்துவர்களின் கோரிக்கையை பரிசீலிக்க அரசுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளது.
போராட்டத்தில் ஈடுபட்ட மருத்துவர்களின் பணி இடமாற்றத்தை எதிர்த்து வழக்கு தொடரப்பட்டது.அந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், போராட்டத்தில் ஈடுபட்ட மருத்துவர்களை இடமாற்றம் செய்த உத்தரவு ரத்து என்று தீர்ப்பு அளித்துள்ளது. மேலும் தமிழக அரசு மருத்துவர்களுக்கு போராட்டம் நடத்த உரிமை இல்லை என்றும் அரசு மருத்துவர்களின் கோரிக்கையை பரிசீலிக்க அரசுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளது.
தமிழகத்தில் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மருத்துவா்கள் மாவட்ட தலைமை மருத்துவமனைகளிலும் ,அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளிலும் வேலை செய்து வருகின்றனா்.காலமுறை ஊதியமும், பிற மாநிலங்களுக்கு நிகராக ஊதிய உயா்வும் வழங்க வேண்டும் என்பது அவா்களது பிரதான கோரிக்கையாக இருக்கிறது. அதுதொடா்பாக அரசு தரப்பில் குழு ஓன்று அமைக்கப்பட்டது. அந்த குழு அளித்த பரிந்துரைகள் வலியுறுத்தி கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் அரசு மருத்துவா்கள் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தை ஈடுபட்டனர்.
இவர்களின் போராட்டத்தால் தமிழகம் முழுவதும் நோயாளிகள் சிரமப்பட்டனர்.பின்னர் மருத்துவர்களின் பிரதிநிதிகளுடன் சுகாதார துறை அமைச்சா் விஜயபாஸ்கா், சுகாதாரத் துறைச் செயலா் பீலா ராஜேஷ் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்திய பிறகு போராட்டம் கைவிடப்பட்டது.
இந்நிலையில் இந்த போராட்டத்தில் ஈடுபட்ட மருத்துவர்கள் சிலரை பணியிட மாற்றம் செய்தது தமிழக அரசு . இந்த பணியிட மாற்றத்தை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் அரசு மருத்துவர் பாலசுப்ரமணியம் உட்பட சிலர் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் மருத்துவர்களை தமிழக அரசு மருத்துவர்கள் சிலரை பணியிட மாற்றம் செய்து பிறப்பித்த உத்தரவை ரத்து செய்துள்ளது.