#Breaking : 200, 500 என அதிரடியாக அபராதம் விதித்த சென்னை மாநகராட்சி…!
சென்னையில் கொரோனா விதிகளை மீறுவோரிடம் நாள்தோறும் ரூ.10 லட்சம் அபராதம் வசூலிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், இதனை கட்டுப்படுத்த தமிழக அரசு பல கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. இந்த கட்டுப்பாடுகள், நாளை முதல் அமலுக்கு வர உள்ளது.
இந்நிலையில், சென்னையில் கொரோனா விதிகளை மீறுவோரிடம் இருந்து அபராதம் விதிக்க மண்டலம் வாரியாக இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி, சென்னையில் மாஸ்க்கை முழுமையாக அணியாவிட்டால் ரூ.200, பொது இடத்தில் எச்சில் துப்பினால் ரூ.500 அபராதமும், கொரோனா குவாரன்டைன் விதியை மீறினால் ரூ.500 அபராதம் விதிக்கப்படும் என மாநகராட்சி அறிவித்துள்ளது. மேலும்,சென்னையில் கொரோனா விதிகளை மீறுவோரிடம் நாள்தோறும் ரூ.10 லட்சம் அபராதம் வசூலிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.