#BREAKING: சென்னை மாநகராட்சி – வேட்பாளர் பட்டியலை வெளியிட்ட தேமுதிக!
நகர்ப்புற உள்ளாட்சியில் சென்னை மாநகராட்சி வார்டுகளில் போட்டியிடும் தேமுதிக வேட்பாளர் பட்டியல் வெளியீடு.
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் சென்னை மாநகராட்சியில் போட்டியிடும் 100 வேட்பாளர்களின் பட்டியலை தேமுதிக வெளியிட்டுள்ளது. சென்னை மாநகராட்சியில் மொத்தமுள்ள 200 வார்டுகளில் 100 வார்டுகளுக்கு மட்டுமே வேட்பாளர்களை அறிவித்துள்ளது தேமுதிக. நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் தேமுதிக தனித்து போட்டியிடும் நிலையில், திருப்பூரை தொடர்ந்து சென்னைக்கு வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளது.
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் தேமுதிக திருப்பூர் மாநகராட்சியில் 24 வார்டுகளில் போட்டியிடும் வேட்பாளர்களின் பட்டியலை ஏற்கனவே வெளியிட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
— Dinasuvadu Tamil (@DinasuvaduTamil) January 31, 2022