செங்கல்பட்டில் உள்ள தடுப்பூசி தயாரிக்கும் மையத்தை தமிழக அரசுக்கு குத்தகைக்கு தருமாறு பிரதமருக்கு மு.க.ஸ்டாலின் கடிதம்.
கொரோனா வைரஸின் இரண்டாவது அலை உச்சத்தில் இருக்கிறது. அதனை எதிர்கொள்வதற்கு அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதில் குறிப்பாக தடுப்பூசி அனைவரும் செலுத்த வேண்டும் என்ற விழிப்புணர்வை தமிழக அரசு ஏற்படுத்தி வருகிறது. தடுப்பூசி பொறுத்த வரையில் மத்திய அரசு ஒதுக்கீடு செய்த தடுப்புசி போதாது என்ற நிலையில் தமிழக அரசு உலகளாவிய டெண்டர் கோரப்பட்டுள்ளது.
அதே நேரத்தில் தமிழக அரசு தம்மிடமுள்ள கட்டமைப்பை கொண்டு ஆக்ஸிஜன் போன்ற போன்றவைகளை கையிருப்பில் வைத்துள்ளன. இதனால், தடுப்பூசி தயாரிப்பில் சில நடவடிக்கைகளை எடுக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது. செங்கல்பட்டு மாவட்டத்தில் மத்திய அரசால் ஒருங்கிணைந்த தடுப்பூசி வளாகம் (HLL Biotech) கடந்த 2012-ம் ஆண்டு துவங்கப்பட்டது. ஆனால், தற்போது வரையில் ஒரு டோஸ் மருந்துகூட தயாரிக்காமல் தொடர்ந்து கிடப்பிலேயே உள்ளது.
இந்நிலையில், செங்கல்பட்டு தடுப்பூசி நிறுவனத்தை தமிழகத்திற்கு ஒதுக்க வலியுறுத்துவதற்காக தமிழக தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு டி.ஆர்.பாலு உள்ளிட்டோர் டெல்லி சென்றுள்ளனர். இன்னும் சற்று நேரத்தில் மத்திய தொழில்துறை அமைச்சர் பியூஷ் கோயலை அமைச்சர் தங்கம் தென்னரசு சந்தித்து பேச உள்ளார்.
இதற்கிடையில் மத்திய அரசுக்கு சொந்தமான செங்கல்பட்டு தடுப்பூசி உற்பத்தி மையத்தை முழு சுதந்திரத்துடன் தமிழக அரசுக்கு குத்தகைக்கு வழங்கக்கோரி முதல்வர் மு.க.ஸ்டாலின் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார். தமிழகத்திடம் தடுப்பூசி மையத்தை ஒப்படைத்தால் உடனடியாக தடுப்பூசி உற்பத்தி தொடங்க நடவடிக்கை எடுக்கப்படும் என கடிதத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கோரிக்கை வைத்துள்ளார்.
செங்கல்பட்டு தடுப்பூசி உற்பத்தி மையத்தை நேற்று முன்தினம் முதல் அமைச்சர் நேரில் ஆய்வு செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
தெலங்காணா: 'புஷ்பா 2' திரைப்படத்தின் சிறப்பு கட்சியை பார்க்க ரசிகை ஒருவர் உயிரிழந்த விவகாரத்தில், நடிகர் அல்லு அர்ஜுன் மீது,…
டெல்லி: யூடியூப் உலகின் பல்வேறு மக்களுக்கு பணம் சம்பாதிப்பதற்கு மட்டும் இல்லாமல், மக்களுக்கு தேவையான வீடியோக்களை பார்ப்பதற்கும் ஒரு சமூக…
சென்னை: சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில், திமுக செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில், திமுக…
தை அமாவாசை 2025-ல் வரும் தேதி மற்றும் அதன் சிறப்புகளை இந்த செய்தி குறிப்பில் காணலாம். சென்னை :அமாவாசை என்றாலே…
ஜெய்சால்மர் : ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சல்மேரில், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் நேற்று நடைபெற்ற 55-வது ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டத்தில்,…
சென்னை: தமிழகம் முழுவதும் நீதிமன்றங்களில் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட DGP சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார். திருநெல்வேலி…