#BREAKING: தேர் விபத்து; திமுக சார்பில் ரூ.2 லட்சம் நிவாரணம் – மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!
தஞ்சை தேர்பவனி விபத்தில் உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு திமுக சார்பில் தலா ரூ.2 லட்சம் நிவாரணம்.
இதுதொடர்பாக திமுக தலைவரும், தமிழக முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிவிப்பில், தஞ்சாவூர் அருகே களிமேடு கிராமத்தில் அதிகாலை நடைபெற்ற தேர்த் திருவிழாவில் மின் விபத்து ஏற்பட்டதால், 11 பேர் பலியான நிலையில், 14 பேர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில், இம்மின் விபத்தில் இறந்த 11 குடும்பங்களுக்கு தலா 2 லட்ச ரூபாய் வீதமும், காயமடைந்த 14 பேர்களுக்கு தலா ரூ.25 ஆயிரம் என மொத்தம் 25 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் நிதியுதவி வழங்கப்படும் என்று தெரிவித்துக் கொள்கிறேன் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, ஏற்கனவே தேர் திருவிழாவில் மின்சாரம் தாக்கி உயிரிழந்தோரின் குடும்பத்திற்கு தலா ரூ.5 லட்சம் வழங்குவதாகவும், விபத்தில் காயமடைந்தவர்களுக்கு சிறப்பான சிகிச்சை அளிக்கவும் முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
“தஞ்சாவூர் களிமேடு கிராமத்தில் நடைபெற்ற தேர்த் திருவிழாவில் ஏற்பட்ட மின்விபத்தில், பலியான 11 பேர் குடும்பங்களுக்கு தலா ரூ. 2 இலட்சம் வீதமும்; காயமடைந்த 14 பேருக்கு தலா ரூ. 25 ஆயிரம் வீதமும் மொத்தம் ரூ. 25 இலட்சத்து 50 ஆயிரம் நிதிஉதவி”
– கழக தலைவர் @mkstalin அவர்கள் அறிவிப்பு. pic.twitter.com/1ceY8aEEvk
— DMK (@arivalayam) April 27, 2022