#Breaking:தேர் விபத்து:உயிரிழந்தோரின் குடும்பத்துக்கு ரூ.1 லட்சம் நிதி – ஓபிஎஸ்,ஈபிஎஸ் அறிவிப்பு!

Published by
Edison

தஞ்சாவூரை அடுத்துள்ள களிமேடு அப்பர் கோயிலில் நேற்று நள்ளிரவு நடைபெற்ற 94-வது ஆண்டு சித்திரை தேர் திருவிழாவில்  உயர் மின் அழுத்த கம்பி மீது தேர் உரசியதில் மின்சாரம் பாய்ந்ததில் இரண்டு சிறுவர்கள் உட்பட மொத்தம் 11 பேர் உயிரிழந்துள்ளனர்.மேலும், 15-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த விபத்தில் உயிரிழந்த குடும்பத்திற்கு குடியரசுத் தலைவர்,முதல்வர் உள்பட பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.மின்சாரம் தாக்கி உயிரிழந்தோரின் குடும்பத்திற்கு தலா ரூ.5 லட்சம் வழங்குவதாக முதல்வர் ஸ்டாலின் அறிவித்திருந்தார். விபத்தில் காயமடைந்தவர்களுக்கு சிறப்பான சிகிச்சை அளிக்கவும் உத்தரவிட்டுள்ளார்.மேலும் விமானம் மூலம் முதல்வர் தஞ்சை சென்று உயிரிழந்தவர்களின் குடும்பத்தார்களுக்கு ஆறுதல் சொல்ல புறப்பட்டுள்ளார்.

இதனைத் தொடர்ந்து,தஞ்சை தேர் திருவிழாவில் மின்சாரம் தாக்கி உயிரிழந்த 11 பேரின் குடும்பத்தினருக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்ததுடன்,உயிரிழந்த 11 பேரின்  குடும்பத்திற்கு தலா ரூ.2 லட்சம் வழங்கப்படும் என்றும் காயமடைந்தோருக்கு தலா ரூ.50 ஆயிரம் வழங்கப்படும் எனவும் அறிவித்துள்ளார்.

இந்நிலையில்,தேர் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு அதிமுக சார்பில் ரூ.1 லட்சம் நிதி வழங்கப்படும் என்றும்,காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் 15 பேர்களுக்கு ரூ.25 ஆயிரம் வழங்கப்படும் என்று அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ்,இணை ஒருங்கிணைப்பாளர் ஈபிஎஸ் ஆகியோர் அறிவித்துள்ளனர்.

Recent Posts

எடப்பாடி பழனிசாமி வாய்க்கு வந்தபடி வெட்டிக் கதை பேசுகிறார்! முதல்வர் ஸ்டாலின் பதிலடி!

எடப்பாடி பழனிசாமி வாய்க்கு வந்தபடி வெட்டிக் கதை பேசுகிறார்! முதல்வர் ஸ்டாலின் பதிலடி!

சிவகங்கை : கடந்த சில நாட்களுக்கு முன்பு சேலத்தில் செய்தியாளர்களை சந்தித்தபோது அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அமைச்சர் செந்தில்…

41 minutes ago

“கம்பீருக்கு நேரம் கொடுங்க”..வேண்டுகோள் வைத்த சவுரவ் கங்குலி!

கொல்கத்தா : இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையேயான5 போட்டிகள் கொண்ட டி20 தொடரின் முதல் போட்டி இன்று இரவு 7…

1 hour ago

‘இரும்புக்கை மாயாவி’ கை மாறி அமீர்கானுக்கு போன காரணம் என்ன?

சென்னை : லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் சூர்யா விக்ரம் படத்தில் நடித்த ரோலக்ஸ் கதாபாத்திரமே ரசிகர்களுக்கு மறக்க முடியாத ஒரு…

2 hours ago

சிவகங்கை நலத்திட்டங்கள்… லிஸ்ட் போட்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

சிவகங்கை : தமிழக அரசின் சார்பில் செயல்படுத்தப்படும் நலதிட்டங்கள் குறித்து கள ஆய்வு மேற்கொள்ளவும், பல்வேறு நல திட்டங்களை தொடங்கி…

2 hours ago

சுயநலத்திற்காக தமிழ்நாட்டையே பாஜகவிடம் அடமானம் வைத்தவர் இபிஎஸ் – செந்தில் பாலாஜி கடும் தாக்கு!

சென்னை : கடந்த சில நாட்களுக்கு முன்பு சேலத்தில் செய்தியாளர்களை சந்தித்தபோது அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அமைச்சர் செந்தில் பாலாஜியை…

3 hours ago

வரலாறு காணாத வகையில் உயர்ந்த தங்கம் விலை! இன்றைய நிலவரம் இதோ!

சென்னை : நேற்று (ஜனவரி 21, 2025) அன்று சென்னையில் 22 கேரட் தங்கத்தின் விலை ஒரு சவரனுக்கு ரூ.59,600 ஆக…

3 hours ago