#Breaking:தேர் விபத்து:உயிரிழந்தோரின் குடும்பத்துக்கு ரூ.1 லட்சம் நிதி – ஓபிஎஸ்,ஈபிஎஸ் அறிவிப்பு!
தஞ்சாவூரை அடுத்துள்ள களிமேடு அப்பர் கோயிலில் நேற்று நள்ளிரவு நடைபெற்ற 94-வது ஆண்டு சித்திரை தேர் திருவிழாவில் உயர் மின் அழுத்த கம்பி மீது தேர் உரசியதில் மின்சாரம் பாய்ந்ததில் இரண்டு சிறுவர்கள் உட்பட மொத்தம் 11 பேர் உயிரிழந்துள்ளனர்.மேலும், 15-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த விபத்தில் உயிரிழந்த குடும்பத்திற்கு குடியரசுத் தலைவர்,முதல்வர் உள்பட பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.மின்சாரம் தாக்கி உயிரிழந்தோரின் குடும்பத்திற்கு தலா ரூ.5 லட்சம் வழங்குவதாக முதல்வர் ஸ்டாலின் அறிவித்திருந்தார். விபத்தில் காயமடைந்தவர்களுக்கு சிறப்பான சிகிச்சை அளிக்கவும் உத்தரவிட்டுள்ளார்.மேலும் விமானம் மூலம் முதல்வர் தஞ்சை சென்று உயிரிழந்தவர்களின் குடும்பத்தார்களுக்கு ஆறுதல் சொல்ல புறப்பட்டுள்ளார்.
இதனைத் தொடர்ந்து,தஞ்சை தேர் திருவிழாவில் மின்சாரம் தாக்கி உயிரிழந்த 11 பேரின் குடும்பத்தினருக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்ததுடன்,உயிரிழந்த 11 பேரின் குடும்பத்திற்கு தலா ரூ.2 லட்சம் வழங்கப்படும் என்றும் காயமடைந்தோருக்கு தலா ரூ.50 ஆயிரம் வழங்கப்படும் எனவும் அறிவித்துள்ளார்.
இந்நிலையில்,தேர் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு அதிமுக சார்பில் ரூ.1 லட்சம் நிதி வழங்கப்படும் என்றும்,காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் 15 பேர்களுக்கு ரூ.25 ஆயிரம் வழங்கப்படும் என்று அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ்,இணை ஒருங்கிணைப்பாளர் ஈபிஎஸ் ஆகியோர் அறிவித்துள்ளனர்.
கழக ஒருங்கிணைப்பாளர் திரு. ஓ. பன்னீர்செல்வம், கழக இணை ஒருங்கிணைப்பாளர் திரு. எடப்பாடி கே. பழனிசாமி ஆகியோரின் இரங்கல் செய்தி.
தஞ்சை களிமேடு தேர் பவனியின் போது ஏற்பட்ட தீ விபத்தில் உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கல் ! pic.twitter.com/3nmDjxAqOU
— AIADMK (@AIADMKOfficial) April 27, 2022