#BREAKING: தமிழகத்தில் 5 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு – வானிலை மையம்.!
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் வரும் 27-ஆம் தேதி வரை லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு என வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் ஒரு சில இடங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. அந்த வகையில், வளிமண்டல கீழடுக்கில் கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திப்பதால் வரும் மார்ச் 23, 24, 25, 26, 27 ஆகிய 5 நாட்களில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு என அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையை பொறுத்தவரை அடுத்த 2 நாட்களுக்கு ஒருசில
இடங்களில் இடிமின்னலுடன் லேசான மழைக்கு வாய்ப்பு எனவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.