#BREAKING : தமிழகத்தில் இன்று 4 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம்
தமிழகத்தில் பருவமழை தொடங்கியுள்ள நிலையில், அடுத்த 24 மணி நேரத்திற்கு 4 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் பருவமழை தொடங்கியுள்ள நிலையில், அடுத்த 24 மணி நேரத்திற்கு 4 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, திருவள்ளூர், ராணிப்பேட்டை, சேலம், கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், தமிழகத்தில் 5 நாட்களுக்கு கனமழை நீடிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னையை பொறுத்தவரையில்,2 நாட்களுக்கு மிதமான மழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.