#BREAKING: தமிழகத்தில் 17 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு – சென்னை வானிலை மையம்
தமிழகத்தில் 17 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு.
வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால் தமிழ்நாட்டில் அடுத்த 3 நாட்களுக்கு நெல்லை, தூத்துக்குடி, ராமநாதபுரம், விருதுநகர், சிவகங்கை, மதுரை, புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், மயிலாடுதுறை, நாகை, கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, சேலம், திருவண்ணாமலை, காஞ்சிபுரம், காரைக்கால் ஆகிய 17 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
சென்னை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் தமிழகத்தில் நேற்று இடியுடன் கூடிய கனமழை பெய்தது. இந்த நிலையில் தமிழகம், 17 மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னை மற்றும் புதுச்சேரியில் அடுத்த 2 நாட்கள் இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்யலாம் என்றும் அரபி கடலில் பலத்த காற்று வீசும் என்பதால் 26ம் தேதி வரை 5 நாட்களுக்கு தென்மேற்கு, மத்திய அரபிக் கடலுக்கு மீனவர்கள் செல்லவேண்டாம் எனவும் வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியுள்ளது.