#BREAKING: தமிழகத்தில் இந்த 13 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு.!
தமிழகத்தில் 13 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உளது என்று வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
அடுத்த 24 மணிநேரத்தில் தமிழகத்தில் தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, புதுக்கோட்டை, சிவகங்கை, நெல்லை, தேனீ, திண்டுக்கல், தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. புதுச்சேரியின் காரைக்கால் போன்ற இடங்களிலும் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக அறிவித்துள்ளனர்.
மேலும், ராமநாதபுரம், கடலூர் மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வும் மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் ஜனவரி 14, 15, 16 -ஆம் தேதிகளில் பரவலாக மழை நீக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.