தமிழகத்தில் மழை, வெள்ள சேதத்தை ஆய்வு செய்ய 6 பேர் கொண்ட மத்திய குழு மாலை வருவதாக தி.ஆர்.பாலு பேட்டி.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில் கடந்த வாரம் ஏற்பட்ட காற்றழுத்த தாழ்வு மண்டலத்தால் பல மாவட்டங்களில் மழை பெய்தது. இந்த கனமழையால் சென்னை, கன்னியாகுமரி உட்பட பல்வேறு மாவட்டங்கள் பாதிப்புக்குள்ளாகி உள்ளது.
இதனையடுத்து வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை தமிழக முதல்வர் மற்றும் அமைச்சர்கள், அதிகாரிகள் நேரில் சென்று பார்வையிட்ட மக்களுக்கு நிவாரண பொருட்களை வழங்கினர். இந்நிலையில் திமுக மக்களவை உறுப்பினர் டி.ஆர்.பாலு அவர்கள் டெல்லியில் மத்திய அமைச்சர் அமித்ஷாவை நேரில் சந்தித்து பேசியுள்ளார்.
அப்போது அவரிடம் தமிழகத்தில் மழை வெள்ளத்தால் பாதிப்புக்கு நிவாரண உதவி வேண்டி கோரிக்கையை முன்வைத்தா.ர் அப்போது தமிழகத்திற்கு வெள்ள நிவாரணமாக மொத்தம் ரூ.2,079 கோடி தேவை என்று, முதல் கட்டமாக ரூ.550 கோடியை விடுவிக்கக் கோரியும் வலியுறுத்தினார்.
இந்த சந்திப்பிற்கு பின் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர், ‘தமிழகத்தில் மழை, வெள்ள சேதத்தை ஆய்வு செய்ய 6 பேர் கொண்ட மத்திய குழு மாலை வருவதாக கூறினார். மேலும், மழையால் 50 ஆயிரம் ஹெக்டர் பயிர்ச்சேதம் ஏற்பட்டுள்ளது. 54 பேர் உயிரிழந்துள்ளனர். 52 பேர் காயமடைந்துள்ளனர். மழை வெள்ளத்தால் 2,500 வீடுகள் சேதமடைந்துள்ளன. 6,871 கால்நடைகள் இறந்த நிலையில், 701 வீடுகள் முழுமையாக சேதமடைந்துள்ளன என தெரிவித்துள்ளார்.
சென்னை : செங்கல்பட்டு மாவட்டம் காட்டாங்குளத்தூர் பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் நடைபெற்ற சொல் தமிழா சொல் எனும் நிகழ்ச்சியில்…
மும்பை : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியும் பெங்களூர் அணியும் மும்பை வான்கடே மைதானத்தில் மோதுகிறார்கள். இந்த…
சென்னை : இன்று செங்கல்பட்டு மாவட்டம் காட்டாங்குளத்தூர் பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் நடைபெற்ற சொல் தமிழா சொல் எனும்…
சென்னை : இன்று தமிழக சட்டப்பேரவை நிகழ்வில் கலந்து கொள்ள வந்த அதிமுக எம்எல்ஏக்கள், ‘ யார் அந்த தியாகி?’…
சென்னை : பாஜக மாநிலத் தலைவர் பொறுப்பில் உள்ள அண்ணாமலை இன்னும் ஒருசில தினங்களில் மாற்றப்படுகிறார். அவருக்கு பதிலாக புதிய…
சென்னை : வீட்டில் சமையலுக்கு பயன்படுத்தும் எரிவாயு (கியாஸ்) சிலிண்டரின் விலையை மத்திய அரசு ரூ.50 உயர்த்தியுள்ளது. அதாவது, இதுவரை…