#BREAKING: தமிழக காவல் அதிகாரிகள் 8 பேருக்கு மத்திய அரசு விருது!

Published by
பாலா கலியமூர்த்தி

குற்ற வழக்குகளில் சிறப்பாக விசாரணை மேற்கொண்டதற்கான மத்திய உள்துறை அமைச்சரின் விருதுகள் 152 பேருக்கு அறிவிக்கப்பட்டுள்ளன.

75வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, நாடு முழுவதும் குற்ற வழக்குகளில் சிறப்பாக விசாரணை மேற்கொண்டதற்கான 152 காவலர்களுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் சார்பில் விருது அரிக்கப்பட்டுள்ளது. இதில் தமிழகத்தைச் சேர்ந்த காவல் அதிகாரிகள் எட்டு பேர் இடம்பெற்றுள்ளனர். அதன்படி, காவல் ஆய்வாளர்கள் சரவணன், அன்பரசி, கவிதா, ஜெயவேல், கலைச்செல்வி, மணிவண்ணன், சிதம்பர முருகேசன், கண்மணி ஆகியோருக்கு விருது வழங்கப்படுகிறது.

இந்த விருதுகளைப் பெறும் பணியாளர்களில், 15 பேர் சிபிஐ, மத்திய பிரதேசம் மற்றும் மகாராஷ்டிரா காவல்துறையிலிருந்து தலா 11 பேர், உத்தரபிரதேசத்தில் இருந்து 10 பேர், கேரளா மற்றும் ராஜஸ்தான் காவல்துறையில் இருந்து 9 பேர், 7 பேர் பீகாரைச் சேர்ந்தவர்கள், 6 பேர் குஜராத், கர்நாடகா, டெல்லி காவல்துறையைச் சேர்ந்தவர்கள், மீதமுள்ளவர்கள் மற்ற மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள் என்றும் இவர்களில் 28 பெண் போலீஸ் அதிகாரிகள் அடங்குவர் எனவும் தெரிவித்துள்ளனர்.

Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

“இது துபாய்.. இது எங்கள் சொந்த ஊர் கிடையாது” சர்ச்சை கேள்விக்கு ரோஹித் சர்மா பதிலடி.!

துபாய் : சாம்பியன்ஸ் டிராபியில் நாளை நடைபெறவிருக்கும் அரையிறுதி போட்டியில் இந்தியா ஆஸ்திரேலியாவை எதிர்கொள்கிறது. இந்த இரு அணிகளும் நாளை…

9 hours ago

ரமலான் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி… தவெக தலைவர் விஜய் பங்கேற்பு.!

சென்னை : வருகின்ற மார்ச் 7ஆம் தேதி தவெக சார்பில் இஃப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. ராயப்பேட்டை ஒய்எம்சிஏ…

10 hours ago

நம்மகிட்ட பட்ஜெட் கொடுத்தா லாபம் தாறுமாறா இருக்கும்…கெத்துக்கட்டும் ‘டிராகன்’ அஷ்வத்!

சென்னை : கொடுக்கப்படும் பட்ஜெட்டில் எந்த அளவுக்கு தரமான படத்தை கொடுத்து மக்களை கவர்ந்து அந்த படத்தினை தயாரித்த தயாரிப்பாளர்களுக்கு லாபத்தை…

11 hours ago

IND vs AUS : சாம்பியன்ஸ் டிராபி முதல் அரையிறுதி போட்டி… வானிலை, பிட்ச் நிலவரம்.!

துபாய் : சாம்பியன்ஸ் டிராபியின் அரையிறுதிப் போட்டி இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே நாளை (மார்ச் 4 ஆம்…

12 hours ago

இது நம்ம லிஸ்ட்லயே இல்லையே! கேப்டன் பொறுப்பை தூக்கி ரஹானேயிடம் கொடுத்த கொல்கத்தா!

கொல்கத்தா : கடந்த 2024-ஆம் ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் தொடரில் கொல்கத்தா அணி வெற்றிபெற்று கோப்பையை வென்றது. ஷ்ரேயாஸ் ஐயர் தலைமையில்…

12 hours ago

நாகை மாவட்டத்திற்கான புதிய அறிவிப்புகளை வெளியிட்ட முதலமைச்சர்..!

நாகப்பட்டினம் : நாகையில் ரூ.82.99 கோடி மதிப்பிலான 206 புதிய திட்டங்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார். பல்வேறு துறைகள்…

14 hours ago