குஜராத் வழியாகவே ஏராளமான போதைப்பொருள் இந்தியாவுக்குள் வருகின்றன என அமச்சர் பொன்முடி குற்றசாட்டு.
சென்னை அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர் சந்திப்பில் பேசிய உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, போதைப்பொருட்கள் இந்த அளவுக்கு பரவியதற்கு மத்திய அரசு தான் காரணம். மத்திய அரசால் தான் போதை பொருள் அதிகரித்து வருகிறது. குஜராத்தில் தான் போதைப்பொருள் அதிக அளவில் உற்பத்தி ஆகிறது. முத்ரா, விஜயவாடா துறைமுகங்களில் போதை பொருள் இறக்குமதி செய்யப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது.
போதைப்பொருள் கடத்தல் போன்றவை அதிகளவில் நடைபெற்று வருகிறது. மத்திய அரசு இதனை தடுக்க முழுமையாக நடவடிக்கை எடுக்க வேண்டும். துறைமுகங்கள் தனியார்மயமாக்கியதன் மூலம் இந்த போதைப்பொருள் கடத்தல் அதிகரித்துள்ளது. பல்வேறு மாநிலங்கள், நாடுகளில் இருந்து போதைப்பொருள் கடத்தலை தடுக்க மத்திய அரசு இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை, இதனால்தான் தமிழகத்தில் போதை பொருள் அதிக அளவு பரவி உள்ளது.
குஜராத் நீதிமன்றம் அறிவுறுத்தலுக்கு பிறகும் மத்திய அரசு போதைப்பொருளை தடுக்க நடவடிக்கை எடுக்கவில்லை. தமிழ்நாட்டில் போதைப்பொருள் விற்பனையை அதிகரித்துவிட்டு சென்ற அதிமுகவினர் தற்போது அதுகுறித்து பேசுகின்றனர். அதிமுக ஆட்சியில் 10 ஆண்டுகளில் விதிக்கப்பட்ட அபாரதத்துக்கு நிகராக திமுக ஆட்சியில் ஒரே ஆண்டில் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. அதிமுக ஆட்சி காலத்தில் 10 ஆண்டுகளில் 950 டன் போதைப்பொருள் மட்டுமே பறிமுதல் செய்யப்பட்டது.
தமிழ்நாட்டில் திமுக ஆட்சியில் ஒரே ஆண்டில் 152 டன் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. பல்வேறு எதிர்க்கட்சிகளும் போதைப்பொருள் விற்பனையை தடுக்கும்படி மத்திய அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர். குறிப்பாக பிரதமர் மோடியின் சொந்த மாநிலமான குஜராத் வழியாகவே ஏராளமான போதைப்பொருள் இந்தியாவுக்குள் வருகின்றன. மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுத்தால் தமிழ்நாட்டில் போதைப்பொருள் விற்பனை முற்றிலும் தடுக்கப்படும்.
தமிழக அரசு பல்வேறு நடவடிக்கை எடுத்து வந்தாலும் போதைப்பொருள் விற்பனை தொடர்கிறது. தமிழ்நாட்டில் போதைப்பொருள் விற்பனையை முற்றிலும் தடுக்க முதலமைச்சர் முக ஸ்டாலின் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். ஆப்கானிஸ்தானில் இருந்து இந்தியாவுக்குள் போதைப்பொருள் கடத்தி வருவதை தடுக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தார்.
தெலங்காணா: 'புஷ்பா 2' திரைப்படத்தின் சிறப்பு கட்சியை பார்க்க ரசிகை ஒருவர் உயிரிழந்த விவகாரத்தில், நடிகர் அல்லு அர்ஜுன் மீது,…
டெல்லி: யூடியூப் உலகின் பல்வேறு மக்களுக்கு பணம் சம்பாதிப்பதற்கு மட்டும் இல்லாமல், மக்களுக்கு தேவையான வீடியோக்களை பார்ப்பதற்கும் ஒரு சமூக…
சென்னை: சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில், திமுக செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில், திமுக…
தை அமாவாசை 2025-ல் வரும் தேதி மற்றும் அதன் சிறப்புகளை இந்த செய்தி குறிப்பில் காணலாம். சென்னை :அமாவாசை என்றாலே…
ஜெய்சால்மர் : ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சல்மேரில், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் நேற்று நடைபெற்ற 55-வது ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டத்தில்,…
சென்னை: தமிழகம் முழுவதும் நீதிமன்றங்களில் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட DGP சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார். திருநெல்வேலி…